குமரியின் விடுதலை நாளை முன்னிட்டு நவம்பர் -1 இன்று தமிழ்நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் இயக்கத்தின் நிறுவனத் தலைவர் டாக்டர்.வை.தினகரன் தலைமையில் குமரி விடுதலைக்காக போராடிய தியாகி இறச்சகுளம் பி.ஜே.பொன்னையா சாம்பவர் அவரது சமாதியில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அதன் பின்பு இறச்சகுளத்தில் அமைக்கப்பட்டுள்ள குமரி விடுதலைக்காக போராடிய தியாகி பி.எஸ் மணி பிள்ளை, நத்தானியல் நாடார், தியாகி காந்திராமன் பிள்ளை, தியாகி குஞ்சன் நாடார், தியாகி, மருத்துவர்.ME நாயுடு, தியாகி PJ.பொன்னையா, சாம்ராஜ் சாம்பவர், தியாகி AK.செல்லையா சாம்பவர், தியாகி சிவதாணு பிள்ளை ஆகியோர் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தியதோடு வீர வணக்கமும் செலுத்தப்பட்டது.

இறுதியாக வை.தினகரன் பேசியபோது குமரி விடுதலைக்காக போராடிய தியாக வரலாற்றை சாதி அடிப்படையில் பிரிக்காமல் வரலாற்றை திரித்துக் கூறாமல் தெற்கெல்லை போராட்டத்தில் பங்கேற்ற தியாகிகள் அனைவருக்கும் வரும் ஆண்டு அரசு மரியாதை செலுத்த வேண்டும் என்றும் அரசு ஒரு தலைப்பட்சமாக ஒரு குறிப்பிட்ட நபருக்கு மட்டும் அரசு மரியாதை செலுத்தினால் அதை எதிர்த்து தமிழ்நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் தீவிரப் போராட்டத்தை அறிவிக்கும் எனவும் கூறினார்.













; ?>)
; ?>)
; ?>)