• Fri. Jan 17th, 2025

கொலை முயற்சி வழக்கில் குற்றவாளிகளுக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை

ByJeisriRam

Apr 23, 2024

தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுகா, குள்ளப்புரம், கிழக்கு தெருவில் வசிக்கும் சித்திரன் மகன் அனுஷாபாரதி (22) என்பவர் தனது கணவரை எதிர் வீட்டில் குடியிருக்கும் குள்ளபுரம், கிழக்கு தெரு, பரமன் மகன் துரைப்பாண்டி 21, பெரியபாண்டி 22, காமாட்சி மகன் பரமன் 55 ஆகியோர்கள் சேர்ந்து அரிவாளால் வெட்டியும், உருட்டுக்கட்டையால் தாக்கியும் கொலை முயற்சி செய்ததாக ஜெயமங்கலம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
புகார் தொடர்பாக விசாரணை செய்ததில் மச்சான் மனைவி செல்வி என்பவருக்கும், துரைப்பாண்டி என்பவருக்கும் தொடர்பு இருப்பதாக ஊரார் பேசியதை வைத்து கணவர் சித்திரன் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரம் கொண்ட செல்வி கணவர் சித்திரன் 26, என்பவரை அரிவாளால் தாக்கி கொல்ல முயற்சித்தது தெரியவந்தது.
ஜெயமங்கலம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு துரைப்பாண்டி, பெரிய பாண்டி இருவரையும் 29.01.22 அன்று கைது செய்யப்பட்டனர்.
வழக்கு விசாரணை உதவி அமர்வு நீதிமன்றம், பெரியகுளத்தில் நடைபெற்று வந்த நிலையில் துரைப்பாண்டி 21, பெரியபாண்டி 24, பரமன் 55 ஆகியோர்களை உதவி அமர்வு நீதிமன்ற நீதிபதி மாரியப்பன், மூன்று பேரையும் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டு பிரிவு 307 ன் கீழான குற்றத்திற்கு 3 பேருக்கும் தலா 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டணையும், தலா ரூபாய் 5000 அபராதமும் விதித்தும் அபராத தொகையை கட்டத்தவறினால் 6 மாத மெய்க்காவல் தண்டணையும் ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டுமென்று உத்தரவிட்டார்.