• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

240 இந்தியர்களுடன் 6-வது விமானம் புறப்பட்டது…!

240 இந்தியர்களுடன் ஹங்கேரியில் இருந்து 6-வது விமானம் புறப்பட்டது.
உக்ரைனில் தரைப்படை,வான்வழி மற்றும் கப்பல் படைகளை கொண்டு ரஷ்யா உக்கிரமாக தாக்கி வரும் நிலையில்,உக்ரைன் நாட்டில் உள்ள முக்கிய நகரங்களையும் ரஷ்யா கைப்பற்றியுள்ளது.இந்த தாக்குதலில் பலர் உயிரிழந்துள்ள நிலையில்,மேலும் பலர் நாட்டை விட்டு வேறு நாடுகளுக்கு அகதிகளாக தஞ்சம் புகுந்து வருகின்றனர்.

இந்த சூழலில், உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்க மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. அந்த வகையில், ருமேனியா,ஹங்கேரியில் இருந்து விமானங்கள் மூலம் இந்தியர்கள் உக்ரைனில் இருந்து மீட்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், உக்ரைனில் சிக்கிய 240 இந்தியர்களை மீட்டுகொண்டு 6-வது விமானம் டெல்லிக்கு புறப்பட்டது.

உக்ரைனில் இருந்து ஏற்கனவே 5 விமானம் மூலம் இதுவரை 1,156 இந்தியர்கள் தாயகம் திரும்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.