திமுக தலைவரும், மறைந்த தமிழக முன்னாள் முதல்வருமான கலைஞர் கருணாநிதியின் 6ம் ஆண்டு நினைவு தினம். தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்படும் நிலையில் திருப்பத்தூர் சாலையில் அமைந்துள்ள அறிஞர் அண்ணா திருவுருவசிலைக்கு சிவகங்கை நகர் மன்ற தலைவரும் நகரச் செயலாளருமான
துரை ஆனந்த் தலைமையில் சிவகங்கை மாவட்ட துணைச் செயலாளர்
கே எஸ் எம் மணிமுத்து முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அதன் பின்பு மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். அதனைத் தொடர்ந்து சிவகங்கை வடக்கு ஒன்றிய செயலாளர் ஜெயராமன் தலைமையில் ஒன்றிய கட்சி அலுவலகத்தில் கலைஞரின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

அதனைத் தொடர்ந்து பார்வையற்றோர் பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு திமுக சுற்றுச்சூழல் அணியின் துணை செயலாளர் குமணன் ஏற்பாட்டில் மதிய உணவை நகர்மன்ற தலைவர் துரை ஆனந்த் உணவுகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சிவகங்கை மாவட்ட திமுக சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் திருமலை, சிவகங்கை மாவட்ட சுற்றுச்சூழல் அணியின் அமைப்பாளர் எஸ்எஸ்ஏ. வல்லபாய் அவர்கள் முன்னிலையிலும் சிவகங்கை மாவட்ட சுற்றுச்சூழல் அணியின் தலைவர், நகர மன்ற துணைத் தலைவர் கார் கண்ணன் மற்றும் திமுக நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமான கலந்து கொண்டனர்.









