கொல்கத்தாவில் கடந்த (மார்ச்-) இந்திய அரசின் உள்துறை அமைச்சர் அமித்ஷா காணொலி காட்சியின் மூலம் தொடங்கி வைத்த தீபகற்ப கடற்கரை விழிப்புணர்வு பயணத்தில். சி.ஐ.எப்.எஸ். தொழில் பாதுகாப்பு படை வீரர்களால் மொத்தம் 125 பேர் பங்கேற்கும் சைக்கிள் பயணத்தில் 14_ பெண்களும் பங்கேற்கும் விழிப்புணர்வு பயணம் என்பது.

இந்த தொழில் பாதுகாப்பு படை 1969_ம் ஆண்டு 300_பேர்களால் தொடங்கப்பட்ட இந்திய அரசின் தேசிய தொழில் பாதுகாப்பு படையில் இப்போது 1 லட்சம் 96 ஆயிரம் பேர் பணியில் உள்ளார்கள். ஒவ்வொரு ஆண்டும் இந்த துறையில் 10 ஆயிரம் பேர் பணிக்கு புதிதாக தேர்வு செய்யப்படுகிறார்கள்.
இந்தியாவில் கடற்கரை நீளம் 7,500.கிலோ மீட்டர்ஸ் தூரத்தில், சைக்கிள் பயண குழுவினர் கடந்து வந்த தூரம் 6553_ கடந்து நாளை (மார்ச்_31)மாலை கன்னியாகுமரி வந்து சேர்ந்த பின் கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திரா வில் நடக்க இருக்கும் விழாவில் உயர் அதிகாரிகள் மற்றும் சைக்கிள் பயண குழுவினரை அவர்களின் விழிப்புணர்வு பணியை பாராட்டும் நிகழ்வு நடை பெறுகிறது.

சி.ஐ.எஸ்.எப் குழுவினர் இந்தியாவில் 359_இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்தியாவில் உள்ள 68_விமான நிலையங்கள், மற்றும் துறைமுகங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்திய தீபகற்ப கடற்கரை விழிப்புணர்வு பயணத்தில் கடல் பாதுகாப்பு, கடல்வழியாக அணு ஆயுதங்கள், போதைப்பொருட்கள்,கஞ்சா போன்ற கடத்தலை கண் காணிப்ப்பை. கடற்கரை ஓரம், நாட்டின் உட்பகுதி மக்களுக்கும் இத்தகைய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே.சி.ஐ.எஸ்.எப். வீரர்களின் சைக்கிள் பயணத்தின் நோக்கம் என தென்னக மாநிலங்களின் ஐ.ஜி. சரவணன் செய்திகள் இடம் தெரிவித்தார்.