• Thu. Sep 25th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

கோவையில் ரயிலைக் கவிழ்க்க சதி 6பேர் கைது…

BySeenu

Sep 24, 2025

தென் இந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் கோவையில், ஏராளமான தொழில் நிறுவனங்கள் உள்ளது. இங்கு பல லட்சக் கணக்கான மக்கள் வெளியூரு, வெளிமாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்து குடும்பத்துடனும் தங்கி பணியாற்றி வருகின்றனர்.

இதில் வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களுக்கு செல்லும் தொழிலாளர்கள் அதிக அளவில் பயன்படுத்தி வருவது ரயில்களை தான். மேலும் நீண்ட தூரம் செல்லும் பயணிகளின் வசதிக்கு ஏற்ப உள்ளதால், அதிகளவில் ரயில்களை பயன்படுத்தி வருகின்றனர்.

இதைத் தொடர்ந்து கோவையில இருந்து நாள்தோறும் நூற்றுக் கணக்கான ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கோவையில் இருந்து இருகூர் வழியாக சிங்காநல்லூர் செல்லும் ரயில் பாதையில் சூர்யா நகர் என்ற பகுதியில் கடந்த 22 ஆம் தேதி தண்டவாளத்தில் மரக்கட்டைகள் இருப்பதாக ரயில்வே காவல் துறையினருக்கு தகவல் தெரியவந்தது. தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ரயில்வே காவல் துறையினர் அங்கு ரயில் தண்டவாளத்தில் வைக்கப்பட்டு இருந்த மரக்கட்டையை அகற்றி விசாரணை மேற்கொண்டனர். மேலும் அங்கு பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்தனர்.

அதில் கோவை ஒண்டிப்புதூர் பகுதியைச் சேர்ந்த தினேஷ், கோகுலகிருஷ்ணன், வினோத் என்ற சசிகுமார், கார்த்திக், புல்லுக்காட்டு பகுதியைச் சேர்ந்த நாகராஜ் மற்றும் சேலத்தைச் சேர்ந்த வேதவன் என்பது தெரிய வந்தது. அவர்களிடம் நடத்திய விசாரணையில் தண்டவாளத்தில் மரக்கட்டையை வைத்து ரயிலை சேதப்படுத்த முயன்றது தெரியவந்தது. பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கில் துடிதமாக விசாரணை மேற்கொண்டு விரைந்து குற்றவாளிகளை கைது செய்த ரயில்வே தனிப் படையினருக்கு, ரயில்வே காவல் துறை இயக்குனர், தலைவர் மற்றும் கண்காணிப்பாளர் ஆகியோர் வெகுவாக பாராட்டினர்.