• Wed. Feb 18th, 2026
WhatsAppImage2026-02-12at2247202
previous arrow
next arrow
Read Now

குமரி மீனவர்கள் 50_ கோரிக்கைகள்….

மீனவர்களை மண்டல் கமிஷன் அறிவிக்கைப்படி, பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும். கடல் மற்றும் கடற்கரைக்கு என தனி சட்டம் இயற்ற வேண்டும் உட்பட 50 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 17 மீனவர் அமைப்புகள் இணைந்து தேங்காய் பட்டணம் துறைமுக ஆழ்கடலில் படகில் வைத்து தேர்தல் கோரிக்கை அறிக்கை வெளியிட்டனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 17 மீனவ அமைப்புகள் இணைந்து வரும் சட்டமன்ற தேர்தலில் கருத்தில் கொண்டு 50 அம்ச தேர்தல் கோரிக்கை அறிக்கையை தேங்காய் பட்டணம் மீன்பிடி துறைமுக அரபிக் கடல் ஆழ்கடல் பகுதியில் படகில் வைத்து வெளியிட்டனர்.

இந்த நிகழ்வுக்கு தெற்காசிய மீனவர் தோழமை அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அருபணி சர்ச்சில் தெரிவிக்கையில்,

ஒவ்வொரு முறை தேர்தல் வரும்பொழுது அரசியல் கட்சிகள் எங்கள் கோரிக்கை என்னவென்று கேட்கிறார்கள். ஆனால் அதில் பெரும்பாலானவை நிறைவேற்றப் படுவதில்லை. எனவே நாங்கள் எங்களது 50 அம்ச கோரிக்கைகளை இன்று அரபிக் கடலில் படகில் வைத்து வெளியிடுகிறோம்.

மண்டல் கமிஷன் அறிக்கையின்படி, மீனவர்களை பழங்குடி பட்டியலில் சேர்க்க வேண்டும். கல்வி பொருளாதார வேலைவாய்ப்பில் மீனவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். 1979 க்கு முன்பு இருந்ததை போன்று ஒவ்வொரு மீனவ கிராமங்களையும் தனித்தனி ஊராட்சிகளாக அறிவிக்க வேண்டும். கடல் சார்ந்த கடலோர காவல் படை இந்திய கப்பல் படை மற்றும் அமலாக்கத்துறை மீன்வளத்துறை போன்றவற்றில்
மீன்வர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும்.
கடலில் காயமடையும் மற்றும் கானாகாமல் போகும் மீனவர்களை மீட்க கடல் ஆம்புலன்ஸ் மற்றும் மிக நீண்ட நாள் கோரிக்கையான ஹெலிகாப்டர் தளம் அமைக்க வேண்டும்.

கேரளாவில் ஒகிப்புயல் வந்ததற்கு பிறகு, அங்கு காணாமல் போகும் மீனவர்களை மீட்க மீட்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. மாயாயமாகும் மீனவர்களை மீனவர்களே மீட்கும் திட்டத்தை தமிழகத்திலும் அமல்படுத்த வேண்டும்.

மீனவர்களுக்கு என இதுவரை கடல் சட்டம் இல்லை வனச் சட்டத்தையே இங்கு பயன்படுத்துகிறார்கள். எனவே கடல் மற்றும் கடற்கரைக்கென தனிச்சட்டம் இயற்ற வேண்டும்.

புயல் மற்றும் மழை காலங்களில் கடலில் படகுகள் விபத்து கடல் அரிப்பு வீடுகள் சேதம் ஆகியவற்றை தேசிய பேரிடராக அறிவித்து நிவாரண வழங்க வேண்டும்.
மீனவர்களுக்கு வழங்கும் மன்னனை நலவை அதிக படுத்த வேண்டும். பெரும்பாலும் தற்பொழுது பெரிய படல்களை டீசலை பயன்படுத்தப்படுகிறது எனவே அதற்குரிய டீசலை மானியவில்லை வழங்க வேண்டும்.

தேர்தல் நேரத்தில் இந்த அறிக்கை வெளியிட என்னகாரணம் என்றால், தேர்தல் காலங்களில் அந்தந்த அரசியல் கட்சிகள் மீனவர்களிடம் எங்களுடைய கோரிக்கையை கேட்பது வாடிக்கையாக இருந்து வருகிறது அரசியல் கட்சிகளின் தேர்தல் வாக்குறுதிகளில் திரும்பத் திரும்ப அதே வாக்குறுதிகள் தான் மீண்டும், மீண்டும் வந்து கொண்டிருக்கும். எனவேதான் மீனவர்களுக்காக ஒரு தேர்தல் அறிக்கை வெளியிட வேண்டும் என்கிற எண்ணத்தில் இந்த தேர்தல் அறிக்கை அனைத்து அரசியல் கட்சிகளின் பார்வைக்காக வெளியிட்டுள்ளோம் என தெரிவித்தார் அருட் பணி சர்ச்சில்.