• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

புதுவையில் 50 புதிய மதுவகைகள் அறிமுகம்

ByA.Tamilselvan

Dec 29, 2022

புத்தாண்டை முன்னிட்டு புதுவையில்புதியவகையான மதுவகைகளை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.புதுவைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. ஆண்டுதோறும் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் புதுவையில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். கிறிஸ்துமஸ், அரையாண்டு விடுமுறை, புத்தாண்டு, பொங்கல் என தொடர் நிகழ்வுகளும் விடுமுறையும் இருப்பது சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிக்க செய்கிறது.
சுற்றுலாபயணிகளுக்காக புத்தாண்டை முன்னிட்டு புதுவையில்புதியவகையான மதுவகைகளை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.ஜப்பானிய விஸ்கி, மெக்சிக்கோ டக்கீலா, லண்டன் ஜின், பிரான்ஸ் ஒயின், இத்தாலி பீர், அமெரிக்கன் ஓட்கா மற்றும் கோவா பென்னி என விதவிதமான மதுவகைகள் வரிசை கட்டி மதுபிரியர்களை வரவேற்க காத்திருக்கிறது. மது வகைகளை போல புதிய சைடிஷ்களும் தயாராகியுள்ளன. கடற்கரை பகுதியாக புதுவை இருப்பதால் கடல் உணவுகள், சிக்கன், மட்டன் வகைகள் சிறப்பு சலுகைகளுடன் தயாராகி வருகிறது. புதுவையில் 1400 வகையான மதுவகைகள் ஏற்கனவே சந்தையில் உள்ளது. அத்துடன் புத்தாண்டை குறிவைத்து 50 புதிய மதுவகைகள் களத்தில் இறங்கியுள்ளது.