அரியலூர் மாவட்டம் வெங்கனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அடைக்கலபுரம் கிராமத்தில் ஒரு தோட்டத்தில் ஆல்பர்ட் ஆல்வின் என்பவர் அரியலூர் மாவட்டம் குலமாணிக்கம் கிராமம் மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் பாஸ்கர் என்கிற 1.சைக்கோ பாஸ்கர் (வயது 40) த/பெ கணேசன் என்பவர் (வெங்கனூர் காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி). கண்டிராதீர்த்தம் கிராமத்தைச் சேர்ந்த 2.அர்ஜுன்ராஜ்( வயது 36) த/ பெ முருகன் என்பவர் (திருமானூர் காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி) ஆகிய இருவரும் கையாலும்,பீர் பாட்டிலால் அடித்தும் கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்டவர் அளித்த புகாரின் அடிப்படையில் 10.09.2023 அன்று வெங்கனூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கின் விசாரணை அதிகாரி கீழப்பழுவூர் வட்ட காவல் ஆய்வாளர் ராஜீவ் காந்தி வழக்கு குறித்து விசாரணை செய்து இறுதி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு குறித்த விசாரணை அரியலூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் 12.09.2025 இன்று வழக்கை விசாரித்த முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி. மலர் வாலாண்டினா , மேற்படி குற்றவாளிகள் இருவருக்கும் 5 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 5000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார். இதனைத் தொடர்ந்து அரியலூர் மாவட்ட காவல் துறையினர் குற்றவாளிகள் இருவரையும் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
