• Fri. Jan 2nd, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

ஆட்டோ ஓட்டுனர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேர் கைது..,

ByKalamegam Viswanathan

Jan 2, 2026

மதுரை விமான நிலையம் அருகே உள்ள பெருங்குடி விருசமரத்து ஊரணி பகுதியைச் சேர்ந்தவர் மூக்கையாத்தேவர் இவரது மகன் முனீஸ்வரன் (வயது 26).

இவர் மண்டேலா நகர் பகுதியில் ஆட்டோ ஓட்டி வருகிறார். இன்னும் திருமணமாகவில்லை தாயாருடன் வசித்து வசித்து வருகிறார்.

இந்த நிலையில் முனீஸ்வரன் நண்பரான முருகனை இதே பகுதியில் ஆட்டோ ஓட்டும் திருமுருகன், அருணாச்சலம், தண்டபாணி, சக்திவேல் மற்றும் கார்த்திக் ஆகியோர் சேர்ந்து சில மாதங்களுக்கு முன்பு அடித்துள்ளனர்.

இதனை முனீஸ்வரன் ஐந்து பேரையும் தட்டி கேட்டுள்ளார். இதனால் இவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. கடந்த 28ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பழனி முருகன் கோவிலுக்கு பாதையாத்திரைக்கு முனீஸ்வரன் சென்றதாகவும் கடந்த முன்று நாட்கள் பிறகு நேற்று 31 ஆம் தேதி இரவு வீட்டிற்கு வந்துள்ளார்.

முனீஸ்வரன் கோவிலுக்கு சென்றதால் அவரது பார்வையில்லாத தாயாரை பார்த்துக் கொள்வதற்காக அவரது தங்கை காளீஸ்வரி தூத்துக்குடியில் இருந்து வந்திருப்பதால் அவரை மீண்டும் ஊருக்கு வழி அனுப்பி வைத்துவிட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.

அப்போது மதுரை விமான நிலையம் சாலை நின்று கொண்டிருந்த முனீஸ்வரனை ஆட்டோவில் வந்த சு அருணாச்சலம் உள்ளிட்ட ஐந்து பேர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது திடீரென அவர்கள் மறைத்து வைத்திருந்த கத்தி மற்றும் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை கொண்டு சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே முனிஸ்வரன் உயிரிழந்தார்.

தகவல் அறிந்து வந்த அவனியாபுரம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆட்டோ ஓட்டுனர் முனீஸ்வரனை கொலை செய்து தப்பி ஓடிய திருமுருகன், அருணாச்சலம், தண்டபாணி, சக்திவேல் மற்றும் கார்த்திக் உள்பட 5 பேரை அவனியாபுரம் போலீஸார் கைது செய்தனர்.