• Sun. Dec 7th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

சுசீந்திரம் அக்கரையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி (மார்க்சிஸ்ட்) 4_வது மாநாடு

சுசீந்திரம் அக்கரையில் தோழர் கதிர்வேல் நினைவரங்கத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மார்க்சிஸ்ட்யின் அகஸ்தீஸ்வரம் ஒன்றியம் 4 வந்து மாநாடு நடைபெற்றது. நிகழ்விற்கு கணேசன் தலைமை தாங்கினார். மாநாட்டின் முதல் நிகழ்ச்சியாக தனீஸ் கட்சி கொடியை இயற்றி வைத்தார். நிகழ்வில் அண்மையில் மரணம் அடைந்த இயக்கத்தோழர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

நிகழ்வில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் லீமாரோஸ் உரையாற்றிய போது கம்யூனிஸ்ட் கட்சி பயணப்பட்ட வரலாறு.1964-ம் ஆண்டு கட்சியில் ஏற்பட்ட பிளவு அதன் பின் பல்வேறு மாநிலங்களில் மார்க்சிஸ்ட் கட்சி ஆட்சி அமைத்தது. இப்போது கூட அண்டை மாநிலமான கேரளாவில் மார்க்சிஸ்ட் கட்சியின் தலைமையில் ஆட்சி நடப்பதை குறிபிட்ட லீமாரோஸ் தொடர்ந்து குறிப்பிட்டது. அண்மையில் இலங்கையில் நடைபெற்ற தேர்தலில் மார்க்சிஸ்ட் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. உலக பந்தில் இன்றும் 21_ நாடுகளில் மார்க்சிஸ்ட் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருவதை தொரிவித்தார்.

மாநாட்டின் தீர்மானங்களில் சர்வதேச சுற்றுலா பகுதியான கன்னியாகுமரி பேரூந்து நிலையம் சீர் கெட்டு பல்லாண்டுகள் பழுது அடைந்து கிடக்கும் நிலையில் அண்மையில் அரசு கன்னியாகுமரி பேரூந்து நிலையத்தை சீரமைப்பு செய்ய நிதி ஒதுக்கிய பின்பும், குமரி மாவட்டம் நிர்வாகம் செயல் படாது இருப்பதை கண்டித்து எதிர் வரும் 27_ம் தேதி கன்னியாகுமரி பேரூந்து நிலையம் முன் கண்டனம் போராட்டம் நடத்துவது, கன்னியாகுமரியை மட்டும் அல்ல தமிழகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்திய தேரூர் இரட்டை கொலை (கணவன், மனைவி) துப்பாக்கியால் சுட்டு கொன்ற கொலை நடந்து 13_ ஆண்டுகள் கடந்தும். குற்றவாளிகளை இதுவரை கைது செய்யாத காவல்துறையின் மெத்தனத்தையும் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றம் செய்யப்பட்டது.