• Thu. Mar 19th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் படையினரால் 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

Byகாயத்ரி

Dec 26, 2021

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருடன் ஏற்பட்ட மோதலில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா்.

ஜம்மு-காஷ்மீரின் செளகாம் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக ரகசிய தகவல் உள்ளுர் காவல்துறைக்கு கிடைத்தது. இதனையடுத்து அப்பகுதியில் பாதுகாப்புப் படையினா், காவல்துறையினர் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனா். அப்போது, பதுங்கியிருந்த பயங்கரவாதிகள், பாதுகாப்பு படையினர் நெருங்கிவருதை உணர்ந்து திடீரென பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கியால் சுடத் தொடங்கினா்.

இதையடுத்து, பாதுகாப்புப் படை வீரா்களும் பதிலடி தாக்குதல் நடத்தினர். சிறிது நேரம் நீடித்த துப்பாக்கிச் சண்டையின் முடிவில் இரு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா். பாதுகாப்புப் படை தரப்பில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. பின்னர் அவ்விடம் அமைந்துள்ள பகுதியை ராணுவத்தினா் சுற்றி வளைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனா். கொல்லப்பட்டவா்களிடம் இருந்து இரு ஏ.கே. ரக துப்பாக்கிகள், தோட்டாக்கள் உள்ளிட்ட வெடிப்பொருள் கைப்பற்றப்பட்டன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் பாகிஸ்தானில் இருந்து செயல்படும் லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாத அமைப்பைச் சோ்ந்தவா்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
இதேபோல புல்வாமா மாவட்டத்திலும் பாதுகாப்புப் படையினருடன் ஏற்பட்ட மோதலில் இரு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனா். அவா்கள் யார் என்பது தொடா்பாக போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா். சம்பவம் நிகழ்ந்த பகுதியில் தொடா்ந்து தேடுதல் பணி நடைபெற்று வருகிறது.