• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

போலீஸ் எனக்கூறி வழிப்பறி செய்த 4 பேர் கைது

ByPrabhu Sekar

Feb 16, 2025

போலீஸ் எனக்கூறி, 70 லட்சம் ரூபாய் பணம் மற்றும் இரண்டு செல்போன்களை பிடிங்கி கொண்டு வழிப்பறி செய்து விட்டு, காரில் தப்பி ஓடிய 4 பேர் கொண்ட கும்பளை பள்ளிக்கரணை துணை ஆணையர் கார்த்திகேயன் தலைமையிலான தனிப்படை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து ரொக்க பணம் மற்றும் இரண்டு கார்களை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.

தாம்பரம் அடுத்த செம்பாக்கம், ஹெரிடேஜ் ஜெயேந்திர நகர் பகுதியை சேர்ந்தவர் சுஹேல் அகமது (29). இவர் சென்னை, பாரிஸில் உள்ள, பர்மா பஜாரில் இசி ஃப்ளை என்ற செல்போன் கடை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் இவர் தாம்பரம், ஆக்சிஸ் வங்கியில் அவரது வீட்டை அடமானம் வைத்து 70 லட்சம் ரூபாய் பணத்தை கடனாக பெற்று பணத்தை தனது கடைக்கு கொண்டு சென்றுள்ளார்.

பின்னர் அவரது கடையில் வேலை செய்யும் ஆகாஷ், பிரவீன் ஆகியோரிடம் பணத்தை கொடுத்து அவரது வீட்டில் ஒப்படைக்க சொல்லி அனுப்பி உள்ளார். அவர்கள் நேற்று மாலை சென்னை, கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து ரயில் மூலம் குரோம்பேட்டை ரயில் நிலையத்திற்கு வந்து இறங்கி குரோம்பேட்டை, ராதா நகர், வீரபத்திரன் தெருவில் ரயில்வே தண்டவாளம் அருகே நடந்து சென்று கொண்டிருந்துள்ளனர்.

அப்போது இரண்டு இரு சக்கர வாகனத்தில் வந்த நான்கு பேர் கொண்ட கும்பல் அவர்களை வழிமறித்து தாங்கள் சிட்லபாக்கம் காவல் நிலைய போலீசார் எனக்கூறி பையில் என்ன வைத்திருக்கிறீர்கள் என கேட்டு பையை சோதனை செய்துள்ளனர்.

அதில் பணத்தைப் பார்த்தவுடன் தாங்கள் போலீஸ் எனவும் உங்களை விசாரிக்க வேண்டும் எனக் கூறி அவர்களை ராதா நகர், கொல்லஞ்சாவடி அருகே அழைத்துச் சென்று அங்கு நின்றிருந்த இன்னோவா காரில் ஏற்றிக்கொண்டு ஆகாஷ் என்பவரை மேடவாக்கம் சிக்னல் அருகையும், பிரவீனை சோழிங்கநகர் பகுதியில் சுற்றி விட்டு மீண்டும் ராதாநகர் அருகையும் இறக்கிவிட்டு 70 லட்சம் பணத்தை எடுத்து கொண்டு தப்பி சென்றனர்,

இதனை தொடர்ந்து பணம் கொள்ளையடிக்கபட்டது குறித்து, கடை ஊழியர்கள் ஆகாஷ் சுஹேல் அகமதுக்கு தகவல் தெரிவித்ததின் பேரில் அதிர்ச்சடைந்தவர் சிட்லபாக்கம் காவல் நிலையத்தில் சம்பவம் குறித்து புகார் அளித்துள்ளார்,

இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் தனிப்படை அமைத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட வர்களை உளுந்தூர்பேட்டை சுங்கசாவடியில் கைது செய்தனர்,

இதனையடுத்து போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டதில் திருச்சி மாவட்டத்தை சேர்ந்தவர்களான மணிகண்டன் (31), ஸ்டாலின் (33), ராஜேந்திரகுமார்(34) என்பது தெரியவந்துள்ளது.

மேலும் அவர்களிடமிருந்து 13 லட்சம் பணம் மற்றும் இரண்டு கார்களை பறிமுதல் செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தொடர்ந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மேலும் மூன்று நபர்களை தனிப் படை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.