• Fri. Oct 3rd, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

தமிழகத்தில் 4 ஏடிஜிபிக்களுக்கு டிஜிபியாக பதவி உயர்வு!

தேர்தல் காரணமாக தள்ளிப்போன எடிஜிபிக்கள் பதவி உயர்வு
தமிழக காவல்துறையில் மிக உயரிய பதவி டிஜிபி அந்தஸ்து பதவி ஆகும், அதற்கு கீழ் ஏடிஜிபி பதவி ஆகும்.
இப்பதவிகளுக்கு தகுதியாக உள்ள ஏடிஜிபி, ஐஜி உள்ளிட்ட அதிகாரிகள் குறித்த வரிசைப்பட்டியலை தயாரிக்கும் குழு கடந்த ஜனவரி 29 ஆம் தேதி கூடி வரிசைப்பட்டியலை தயாரித்து முதல்வர் ஒப்புதலுக்கு அனுப்பியது. உடனடியாக ஒப்புதல் அளிக்கப்பட்டும் தேர்தல் நடைமுறை காரணமாக தள்ளிப்போனது.

காவல்துறையில் உயர்ந்த பதவியான டிஜிபி பதவி. அதற்கு கீழ் உள்ள ஏடிஜிபி அந்தஸ்த்தில் உள்ளவர்கள் காவல் ஆணையராக, அல்லது ஒரு துறையின் உயர்ந்தப்பட்ச அதிகாரிகளாக வருவார்கள். தற்போது தமிழகத்தில் ஏற்கெனவே சட்டம் ஒழுங்கு டிஜிபி சைலேந்திர பாபுவுடன் சேர்த்து 12 டிஜிபிக்கள் உள்ளனர். சமீபத்தில் தீயணைப்புத்துறை டிஜிபி கரன்சின்ஹா ஓய்வுப்பெற்றார். தற்போது 1991 ஆம் ஆண்டு பேட்ச் ஏடிஜிபிக்களாக உள்ள ஐபிஎஸ் அதிகாரிகள் 4 பேர் டிஜிபி பதவி உயர்வுக்காக காத்திருக்கும் நிலையில் தற்போது அவர்களுக்கு டிஜிபி பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

காவல்துறையில் உயர்ந்த பதவி இறுதியான பதவி டிஜிபி பதவி ஆகும். அதில் சட்டம் ஒழுங்கு டிஜிபி பதவி ஆகும். ஐபிஎஸ் அதிகாரிகள் ஏ.எஸ்.பியாக பதவியில் இணைந்து எஸ்.பி, டிஐஜி, ஐஜி, ஏடிஜிபி, டிஜிபி என 5 கட்ட பதவி உயர்வை அடைகிறார்கள். இதில் டிஜிபி பதவியை மட்டும் மாநில அரசு அளிக்க முடியாது. பரிந்துரை செய்தால் அது யுபிஎஸ்சியால் அங்கிகரிக்கப்படும். அதன்பின்னரே அவர்களுக்கான பணியிடம் ஒதுக்க முடியும். இந்த டிஜிபிக்களில் ஒருவரே காவல்துறையின் ஒட்டுமொத்த தலைவராக (HOPF) பொறுப்பேற்பார். தர்போது சைலேந்திரபாபு அப்பொறுப்பில் உள்ளார்.
தற்போது ஏடிஜிபிக்களாக உள்ள 4 பேர் டிஜிபிக்களாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் 1991 பேட்ச் ஐபிஎஸ் அதிகாரிகள் ஆவர். பதவி உயர்வும், அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட துறையும்.

  1. தமிழ்நாடு சைபர் பிரிவு ஏடிஜிபியாக பதவி வகிக்கும் அம்ரேஷ் புஜாரி ஒடிசாவை பூர்வீகமாக கொண்டவர். (2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஓய்வு பெறுகிறார்). இவர் டிஜிபியாக பதவி உயர்வு பெற்று சைபர் கிரைம் பிரிவிலேயே டிஜிபியாக தொடர்கிறார். சைபர் கிரைம் பிரிவு டிஜிபி அந்தஸ்த்துக்கு நிலை உயர்த்தப்படுகிறது.
  2. எம்.ரவி (ஏடிஜிபி அந்தஸ்த்தில் உள்ளார், தற்போது தாம்பரம் காவல் ஆணையராக உள்ளார்) இந்த ஆண்டு மே மாதம் ஓய்வு பெற உள்ளார். இவர் தற்போது டிஜிபியாக பதவி உயர்வுப் பெற்று தாம்பரம் காவல் ஆணையராக தொடர்கிறார். இதற்கு ஏற்ப தம்பரம் காவல் ஆணையரகம் டிஜிபி அந்தஸ்த்துக்கு நிலை உயர்த்தப்படுகிறது. (ONE INDIA TAMIL)
  3. ஜெயந்த் முரளி (சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஜிபியாக உள்ளார்) இந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஓய்வு பெற உள்ளார். இவர் தற்போது டிஜிபியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டு சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு டிஜிபியாக தொடர்கிறார். இதற்காக சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு டிஜிபி அந்தஸ்த்துக்கு நிலை உயர்த்தப்படுகிறது.
  4. கருணாசாகர் (அயல்பணியில் டெல்லியில் பணியாற்றுகிறார்) 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஓய்வு பெறுகிறார். தற்போது டிஜிபியாக பதவி உயர்வு பெற்று அயல்பணியில் தொடர்கிறார்.

தற்போது டிஜிபியாக பதவி உயர்வு பெறும் 1991 பேட்ச் 4 அதிகாரிகளுடன் சேர்த்து 16 டிஜிபிக்கள் தமிழகத்தில் உள்ளனர்
தற்போதுள்ள டிஜிபிக்களும், அவர்கள் ஐபிஎஸ் பணியில் இணைந்த ஆண்டும், தற்போதுள்ள பதவியும், ஓய்வு தேதியும் வருமாறு.
1987 பேட்ச் அதிகாரிகள்:

  1. சைலேந்திர பாபு – தற்போதைய காவல் துறையின் தலைவராக (HOPF) 1987 பேட்ச்- ஜூன் 2024-ல் ஓய்வு.
    1988 பேட்ச் அதிகாரிகள்:
  2. சஞ்சய் அரோரா – டெல்லி (இந்தோ-திபெத்தியன் எல்லை பாதுகாப்புப் படை) அயல்பணியில் உள்ளார். (1988 பேட்ச்) ஜூலை 2025-ல் ஓய்வு.
  3. சுனில்குமார் சிங் – சிறைத்துறை டிஜிபி (1988 பேட்ச்) 2022 அக்டோபரில் ஓய்வு.
    1989 பேட்ச் அதிகாரிகள்
  4. கந்தசாமி – லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி (1989- பேட்ச்) – 2023 ஏப்ரல் மாதம் ஒய்வு.
  5. ஷகீல் அக்தர் – சிபிசிஐடி டிஜிபி (1989 பேட்ச்) – 2022 அக்டோபரில் ஓய்வு .
  6. ராஜேஷ் தாஸ் – (1989 பேட்ச்) பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார் – 2023- டிசம்பரில் ஓய்வு.
  7. பிரஜ் கிஷோர் ரவி (பி.கே.ரவி) – டிஜிபி தீயணைப்புத்துறை (1989 பேட்ச்)- 2023 டிசம்பரில் ஓய்வு.
    1990 பேட்ச் அதிகாரிகள்.
  8. சங்கர் ஜிவால் ( சென்னை காவல் ஆணையர்). உத்தரகாண்டைச் சேர்ந்தவர். 2023 ஆகஸ்டில் ஓய்வு.
  9. ஏ.கே.விஸ்வநாதன் (டிஜிபி, காவலர் வீட்டு வசதி வாரியம்) தமிழகத்தைச் சேர்ந்தவர். 2024 ஜூலை மாதம் ஓய்வு.
  10. ஆபாஷ்குமார் (டிஜிபி – உணவுக்கடத்தல் தடுப்புப் பிரிவு ) பிஹாரைச் சேர்ந்தவர். 2025 மார்ச் மாதம் ஓய்வு.
  11. டி.வி. ரவிச்சந்திரன் (டிஜிபி. மத்திய உளவுத்துறை, ஐபி. சென்னை ) ஆந்திராவைச் சேர்ந்தவர். 2024 ஆகஸ்டு மாதம் ஓய்வு.
  12. சீமா அகர்வால் (டிஜிபி தலைமையிடம் சென்னை ) ராஜஸ்தானைச் சேர்ந்தவர். 2026 ஜூன் மாதம் ஓய்வு.

இது தவிர ஐஜிக்களாக பதவியில் இருக்கும் 1997 ஆம் ஆண்டு பேட்ச் அதிகாரிகள் 6 பேருக்கு ஏடிஜிபி அந்தஸ்து பதவி உயர்வு அளிக்கப்படுகிறது. அதற்கான அறிவிப்பு விரைவில் வர உள்ளது.
அவர்கள் விவரம் வருமாறு:

  1. ஆயுஷ்மணி திவாரி (உ.பியைச் சேர்ந்தவர் 2031 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஓய்வு பெறுவார்) தற்போது அயல்பணியில் உள்ளார்.
  2. மஹேஷ்வர் தயாள் தற்போது (ஹரியானாவைச் சேர்ந்தவர்) தற்போது அயல்பணியில் உள்ளார். 2032 ஆம் ஆண்டு ஓய்வு பெற உள்ளார்.
  3. சுமித் சரண் (பிஹாரைச் சேர்ந்தவர்) அயல்பணியில் எல்லைப் பாதுகாப்புப்படை ஐஜியாக உள்ளார். தற்போது 2031 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஓய்வு பெற உள்ளார்.
  4. மோடக் அபின் தினேஷ் (மஹாராஷ்டிராவைச் சேர்ந்தவர்) தற்போது 2030 ஆம் ஆண்டு ஓய்வு பெற உள்ளார். தற்போது பொருளாதார குற்றத்தடுப்புப் பிரிவு ஐஜியாக உள்ளார்.
  5. சஞ்சய் குமார் சிங் (உ.பியைச் சேர்ந்தவர்) தற்போது ஐஜியாக அயல்பணியில் உள்ளார். 2027 ஆம் ஆண்டு ஓய்வு பெற உள்ளார்.
  6. செந்தாமரைக்கண்ணன் (தமிழகத்தைச் சேர்ந்தவர்) தற்போது மாநில மனித உரிமை ஆணைய ஐஜியாக உள்ளார். இந்த ஆண்டு ஜூன் மாதம் ஓய்வுப்பெற உள்ளார்.
  7. முருகன் (தமிழகத்தைச் சேர்ந்தவர்) 2024 ஜூன் மாதம் ஓய்வுப்பெற உள்ளார்,