• Wed. Jan 7th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

37 வது சாலை பாதுகாப்பு விழா..,

ByKalamegam Viswanathan

Jan 5, 2026

நாடு முழுவதும் முப்பத்தி ஏழாவது சாலை பாதுகாப்பு வார விழாவானது கடைபிடித்திட மத்திய சாலைபோக்குவரத்து அமைச்சகத்தில் இருந்து சுற்றறிக்கை பெறப்பட்டுள்ளது இந்த சாலை பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு… மதுரை மாநகர காவல் ஆணையர் முனைவர்ஜே..லோகநாதன் அவர்களின் ஆணையின்படி போக்குவரத்து காவல் துணை ஆணையர் வனிதா அவர்களின் வழிகாட்டுதலின்படி… மதுரை மாநகரில் முக்கிய சந்திப்புகளில் மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது..

அதன் ஒரு பகுதியாக.. இன்று 05.01.26 திங்கள் கிழமை மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையம் அருகில் திலகர் திடல் போக்குவரத்து காவல் ஆய்வாளர் தங்கமணி, சார்பு ஆய்வாளர் சந்தனகுமார் ஆகியோர் பள்ளி மாணவர்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் பொதுமக்களுக்கும்.. சாலை பாதுகாப்பு மாத விழிப்புணர்வின் அவசியம் குறித்தும்..விபத்தினால் ஏற்படக்கூடிய விபரீதங்கள் குறித்தும் துண்டு பிரசுரங்கள் வழங்கி அறிவுரையை எடுத்துரைத்து.. விபத்தில்லாத மதுரையை உருவாக்குவதில் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் தங்கள் பங்கினை காவல்துறையன் இணைந்து ஆற்றுவோம் என்று.. உறுதிமொழி மேற்கொண்டனர்