• Thu. Oct 9th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

தமிழகம் முழுவதும் 35 டி.ஆர்.ஓ.க்கள் பணியிடமாற்றம்

Byவிஷா

Feb 19, 2024

தமிழகம் முழுவதும் 35 டி.ஆர்.ஓ. அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தலைமைச்செயலாளர் சிவ்தாஸ்மீனா உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து தலைமைச் செயலாளர் உத்தரவில் கூறப்பட்டிருப்பதாவது..,
விழுப்புரம், மாநில விற்பனைக் கழக மாவட்ட மேனேஜராக உள்ள ராமு, திருப்பத்தூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாக இயக்குநராகவும், விழுப்புரம் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளராக பணியாற்றிய ஹரிதாஸ், தமிழ்நாடு தொழில் மேம்பாட்டு கழக பொது மேலாளராகவும், திருவள்ளூர் மாவட்ட விற்பனைக்கழக மேனேஜராக உள்ள ரவி, தர்மபுரி சர்க்கரை ஆலை நிர்வாக இயக்குநராகவும், செங்கல்பட்டு வழங்கல் மற்றும் நுகர்வோர் பெருநிறுவன பாதுகாப்பு அதிகாரி பேபி இந்திரா, பரந்தூர் தமிழ்நாடு தொழில் மேம்பாட்டு கழக சிறப்பு வருவாய் அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி நுகர்வோர் பெருநிறுவன பாதுகாப்பு அதிகாரி அபுல் கசிம், மதுரை வருவாய் சிறப்பு அதிகாரியாகவும், தஞ்சாவூர் சிறப்பு துணை கலெக்டர் மோகனா, தமிழ்நாடு உணவு வழங்கல்துறையின் சிறப்பு மண்டல மேனேஜராகவும், விழுப்புரம் ராஜஸ்ரீ சர்க்கரை மற்றும் கெமிக்கல் ஆலை சிறப்பு அதிகாரி கண்ணன், கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலோசனை நிர்வாக இயக்குநராகவும், வேலூர் ஆதி திராவிடர் நல மாவட்ட அதிகாரி பூங்கொடி, சிஎம்டிஏ ஓஆர்ஆர் சிறப்பு மாவட்ட வருவாய் அதிகாரியாகவும், தர்மபுரி கலெக்டரின் நேர்முக உதவியாளர் பழனிதேவி, ஓசூர் தொழில் மேம்பாடு கழக சிறப்பு மாவட்ட வருவாய் அதிகாரியாகவும், அரியலூர் கலெக்டரின் நேர்முக உதவியாளர் பவானி, திண்டுக்கல் மாவட்ட சிறப்பு வருவாய் அதிகாரியாகவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

பெரம்பூர் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் மஞ்சுளா, தமிழ்நாடு மேக்ன சைட் பொது மேலாளராகவும், ஆசிரியர் தேர்வு வாரிய துணை கலெக்டராக உள்ள வள்ளி, ஆசிரியர் தேர்வு வாரிய மாவட்ட வருவாய் அதிகாரியாகவும், தமிழ்நாடு பாடநூல்கழக பொது மேலாளர் சொர்ணம் அமுதா, தமிழ்நாடு மருத்துவ சேவை கழக பொது மேலாளராகவும், அரியலூர் கலெக்டரின் நேர்முக உதவியாளர் பூங்கோதை, தர்மபுரி சிப்காட் சிறப்பு வருவாய் அதிகாரியாகவும், திருப்பத்தூர் வருவாய் மண்டல அதிகாரியாக உள்ள பானு, மருத்துவ கல்வி துறையின் கூடுதல் இயக்குநராகவும், தாட்கோ கன்னியாகுமரி மாவட்ட மேனேஜராக உள்ள குமரவேல், தமிழ்நாடு வக்ப் தீர்ப்பாயத்தின் உறுப்பினராகவும், சென்னை மெட்ரோ வாட்டர் துணை கலெக்டர் சோபியா ஜோதிபாய், சென்னை மாநகராட்சி அம்மா உணவக மாவட்ட வருவாய் அதிகாரியாகவும், ராமநாதபுரம் கலால் பிரிவு உதவி ஆணையராக உள்ள சிவசுப்பிரமணியன், சென்னை சிறு தொழில் கழக பொது மேலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை மாநகராட்சி நிர்வாகப் பிரிவு துணை கலெக்டராக உள்ள நாராயணன், தமிழ்நாடு ஆதி திராவிடர் வீட்டு வசதி வாரிய கழகத்தின் பொது மேலாளராகவும், வேலூர் விற்பனை கழக மாவட்ட மேனேஜராக உள்ள பூங்கொடி, தமிழ்நாடு உணவு வழங்கல்துறையின் விற்பனை பிரிவு பொது மேலாளராகவும், கன்னியாகுமரி கலெக்டரின் நேர்முக உதவியாளர் சங்கரநாராயணன், கடலூர் என்ஆர்கே சுகர் மில்ஸ் நிர்வாக இயக்குநராகவும், புதுக்கோட்டை கலெக்டரின் நேர்முக உதவியாளர் தங்கவேல், சென்னை மாவட்ட வருவாய்(ஸ்டாம்ப்) அதிகாரியாகவும், தூத்துக்குடி கலெக்டரின் நேர்முக உதவியாளர் அமுதா, சென்னை ஆவின் பொது மேலாளராகவும், கன்னியாகுமரி மாவட்ட வழங்கல் மற்றும் பயனாளர் பாதுகாப்பு அதிகாரி விமலாராணி, தமிழ்நாடு உணவு வழங்கல்துறைசென்னை வடக்கு சீனியர் மண்டல மேனேஜராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
நாமக்கல் மாவட்ட வருவாய் மண்டல அதிகாரி சரவணன், தமிழ்நாடு எலக்ட்ரானிக்ஸ் கழக கொள்முதல் பிரிவு பொது மேலாளராகவும், கன்னியாகுமரி சமகூ பாதுகாப்பு திட்ட சிறப்பு துணை கலெக்டராக இருந்த குழந்தை சாமி, சென்னை கணக்கெடுப்பு மற்றும் தீர்வு அதிகாரியாகவும், சிவகங்கை கலால் பிரிவு அதிகாரி கோட்டூர்சாமி, கோயில் நிலங்கள் மற்றம் இந்து அறநிலையத்துறை சிறப்பு அதிகாரியாகவும், தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் மாவட்ட வருவாய் அதிகாரி குருசந்திரன், தமிழ்நாடு எலக்ட்ரானிக்ஸ் கழக பொதுமேலாளராகவும், பெரம்பலூர் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டடோர் பிரிவு அதிகாரி சரவணன், ராமநாதபுரம் சிறப்பு வருவாய் பிரிவு அதிகாரியாகவும், திருப்பூர் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை அதிகாரி துரை, அரசு கேபிள் டிவி பொதுமேலாளராகவும், கள்ளக்குறிச்சி கலெக்டரின் நேர்முக உதவியாளர் ராஜலட்சுமி, வன்னியர் வாரிய உறுப்பினர் செயலாளராகவும், சென்னை மாநகராட்சி நிர்வாகப் பிரிவு துணை கலெக்டர் சந்தானலட்சுமி, சென்னை மதுவிலக்கு மற்றும் கலால் பிரிவு இணை கமிஷனராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கன்னியாகுமரி கலெக்டரின் நில எடுப்பு உதவி அதிகாரி புகாரி, தமிழ்நாடு வக்ப் வாரிய தலைமை நிர்வாக அதிகாரியாகவும், ஈரோடு கலெக்டரின் நில எடுப்பு பிரிவு உதவி அதிகாரி பழனிகுமார், தமிழ்நாடு உணவு வழங்கல் துறையின் சிறப்பு மண்டல மேலாளராகவும்(கோவை), சென்னை சிஎம்ஆர்எல் துணை கலெக்டர் இளங்கோவன், நகர மற்றும் பஞ்சாயத்துகள் இணை இயக்குநராகவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.