• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

தமிழகம் முழுவதும் இன்று 3,000 சிறப்பு மருத்துவ முகாம்கள்..!

Byவிஷா

Dec 9, 2023

தமிழ்நாடு முழுவதும் இன்று 3,000 மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற உள்ளதாக மருத்துவத்துறை அறிவித்துள்ளது.
மிக்ஜாம் புயலால் பாதித்த சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் 1,000 சிறப்பு முகாம்கள் உள்பட 3,000 மருத்துவ முகாம்கள் தமிழ்நாடு முழுவதும் நடத்தப்பட உள்ளன.
மாநில அரசு, தேசிய பேரிடர் மீட்பு குழு தன்னார்வலர்கள், பிரபலங்கள் என போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. மாநகராட்சி ஊழியர்கள் அசுர கதியில் பணிபுரிந்து வந்தாலும், நிலைமை முற்றிலுமாக சீரடையவில்லை. பல பகுதிகளில் மழை நீர் தேங்கிஉள்ளன. மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. தொடர் மழை காரணமாக தொற்றுநோய்கள் உருவாகும் அபாயம் உருவாகியுள்ளது. இதனையடுத்து தமிழகம் நாடு முழுவதும் இன்று 3000 மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறும் என மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.
காலை 9 மணிக்கு தொடங்கும் இந்த முகாமில் பங்கேற்று பொதுமக்கள் சிகிச்சை பெறுமாறு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.