மக்களை காப்போம்,
தமிழகத்தை மீட்போம்
என்ற பெயரில் தமிழகம் முழுவதும் 3 கட்ட பிரச்சார பயணம் மேற்கொண்ட முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நான்காவது கட்டமாக மதுரை மாவட்டத்தில் திருப்பரங்குன்றம் திருமங்கலம் பகுதிகளில் பிரச்சார செய்ய உள்ளார்.

இதற்காக சென்னையிலிருந்து விமான மூலம் இன்று காலை மதுரை வந்தடைந்தார்.
இன்று மாலை 5.30 மணியளவில் அவனியாபுரம் பகுதியில் ஜல்லிக்கட்டு காளை வளர்ப்போர் சங்கம் சார்பாக ஜல்லிக்கட்டு காளைகள் அவருக்கு வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யபட்டுள்ளது.
இதற்காக அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வாடிவாசல் நடைபெறும் பகுதியில் அதிமுக சார்பில் ஆடல் பாடல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பள்ளி நேரம் என்பதால் மாணவர்கள் பள்ளி விட்டு வீடு திரும்பும் போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இதனால் அவனியாபுரம் திருப்பரங்குன்றம் சாலை போக்குவரத்து நெரிசலாக உள்ளது.
அவனியாபுரம் வரும் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை வரவேற்க 18 ஜல்லிக்கட்டு காளைகள் 25 ஆட்டு கிடாய்கள் காலரியில் வரிசையாக நிறுத்தப்பட்டிருந்தது.
ஜல்லிக்கட்டு காளைகள் மற்றும் ஆட்டுக் கிடாக்களை அழைத்து வந்தவர்களுக்கு அதிமுக சார்பில் சில்வர் அண்டா பரிசாக வழங்கப்பட்டது
200 kg எடையுள்ள 13 அடி உயர செவ்ந்தி மாலை ராட்சச கிரேன் மூலம் எடப்பாடிக்கு அணிய மாவட்ட மாணவரணி செயலாளர் தினேஷ்குமார் மூலம் ஏற்பாடு செய்ய்பப்பட்டது.

பேரிகை முழங்க ஒயிலாட்டம், டிரம் செட், செண்ட மேளம், டோல் மேளம் என அதிமுகவினர் எடப்பாடியை வரவேந்த ஏற்பாடு செய்தனர்.
அதிமுக சார்பில் நடைபெறும் வரவேற்பு விழாவில் நடனம் ஆட வந்த பொன் சுபா என்ற நடக கலைஞர் ஜல்லிக்கட்டு காளைகள் மற்றும் ஆட்டு கிடாக்களுடன் செல்பி எடுத்து பரவசமடைந்தார்.

சிந்தாமணி, சாமநத்தம், கீரைத்துறை, வில்லாபுரம் பகுதியில் இருந்து பெண்கள் சரக்கு வாகனம் மூலம் அழைத்து வரப்பட்டனர்.













; ?>)
; ?>)
; ?>)