சிவகாசி தனியார் பெண்கள் கல்லூரி நிர்வாகம் சார்பாக உலக மகளிர் தினக் கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பேராசிரியைகளும், மாணவிகளும் என 3- ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு வீரம், கல்வி மற்றும் அறிவியல் துறையில் சிறந்து விளங்கிய பெண் ஆளுமைகளான வீரமங்கை வேலுநாச்சியார், சாவித்திரிபாய்பூலே மற்றும் சுனிதா வில்லியம்ஸ் ஆகியோரை சிறப்பிக்கும் வகையில் அவர்களின் உருவங்களை முன்னெடுத்து ச்சென்று படைக்கும் பொருட்டு வரிசையாக அணிவகுத்து நின்று இன்டர்நேஷனல் பிரைட் உலக சாதனை நிகழ்வை நிகழ்த்தினார்.

கந்தகபூமியான சிவகாசிக் கல்லூரி மாணவிகள் கடும் வெயிலிலும் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கல்லூரி வளாக மைதானத்தில் திரண்டு நின்று புதுமைப்பெண்ணே- புதுமைப்பெண்ணே கொண்டாடு என்ற பின்னணிப் பாடல் இசைக்கேற்ப சாதனை மங்கைகளாக உருவெடுப்போம் என்ற உறுதியுடன் உலக சாதனை படைத்ததையடுத்து வெற்றிக் களிப்பில் அனைவரும் தங்களது இரண்டு கைகளையும் மேலே உயர்த்தி உற்சாகத்தோடு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
மாணவியரின் உலக சாதனையைத் தொடர்ந்து கல்லூரி நிர்வாகத்திடம் உலக சாதனை
விருது வழங்கப்பட்டதோடு, கலந்து கொண்ட மாணவிகள் அனைவருக்கும் பதக்கம் அணிவித்து, சான்றிதழும் வழங்கப்பட்டது.



