• Wed. May 22nd, 2024

கோவையில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச்செல்லப்பட்ட 3.54 கோடி மதிப்பிலான தங்க, வைர நகைகள் பறிமுதல்…

BySeenu

Apr 6, 2024

தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில் பறக்கும் படை அதிகாரிகள் பல்வேறு இடங்களில் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோவை சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட பெர்க்ஸ் பள்ளி அருகே பறக்கும் படை அதிகாரி மணிமேகலை தலைமையிலான அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஏம்.வி எக்ஸ்பிரஸ் என்ற தனியார் சொந்தமான ஆம்னி காரை பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அதில் ஒரு பெட்டியில் தங்கம் மற்றும் வைர நகைகள் இருந்தது தெரியவந்ததை தொடர்ந்து அதற்கான ஆவணங்கள் குறித்து ஓட்டுநரிடம் விசாரணை நடத்தினர். ஆனால், அதில் உரிய ஆவணங்கள் இல்லாததால் தங்க நகைகளை பறிமுதல் செய்து கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகத்திற்கு எடுத்து வந்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட தங்க நகைகள் சுமார் ஐந்தரை கிலோ இருக்கும் எனவும் சுமார் 3.54 கோடி ரூபாய் மதிப்பு எனவும் இந்த தங்கம் மற்றும் வைர நகைகள் விமானம் மூலம் மும்பைக்கு எடுத்துச் செல்ல கொண்டு வந்துள்ளதாக விசாரணையில் ஓட்டுநர் கூறியதாக பறக்கும் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட தங்க நகைகள் மாவட்ட கருவூலத்தில் ஒப்படைக்கப்பட உள்ளது எனவும் உரிய ஆவணங்களை காண்பித்து நகைகளை பெற்றுக் கொள்ளலாம் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *