குமரி மாவட்டத்தில் பல்வேறு இந்து அமைப்புகளின் சங்கம் ஆக ஒவ்வொரு மாதமும் பவுருணமி தினத்தில், அலங்கரிக்கப்பட்ட அம்மன் வாகனம் கடற்கரை பகுதியில் எழுந்தருளி பவுர்ணமி தினத்தில் அருள் பாலிக்கும் நிகழ்வு கடந்த 24_மாதங்களாக நடந்து வரும் நிலையில், அந்த வரிசையில் 25_வது பவுர்ணமி சமுத்திரம் ஆரத்தி நடைபெற்றது.


நிகழ்வில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் அரச குடும்பத்தின் வாரிசு மகாராணி சிறப்பு விருந்தினராக பங்கேற்று அகல் விளக்கில் தீபம் ஏற்றி வைத்து, சமுத்திரம் ஆராத்தி ஆராதனையை தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதி அதிமுக உறுப்பினர் தளவாய் சுந்தரம், பல்வேறு மடங்களின் ஆதீனம் கர்த்தாக்கள், நாகர்கோவில் மாநகராட்சி பாஜக கவுன்சிலர் முத்துராமன் ஆகியோர் அகல் விளக்குகளில் தீபம் ஏற்றி வைத்தப் பின் ஐந்து பெரும் தீபம் ஒளி ஆராத்தி நடைபெற்றது. உள்ளூர் மக்களுடன், ஏராளமான வெளி மாவட்ட, மாநிலங்கள், கடல் கடந்த நாடுகளில் இருந்து வந்திருந்த சுற்றுலா பயணிகளும் சமுத்திரம் ஆரத்தி நிகழ்வை தரிசனம் செய்தார்கள்.
