

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள முத்துப்பாண்டிபட்டியில் இயங்கி வரும் தனியார் பள்ளியான ஜெயசீலன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி., இந்தப் பள்ளியின் 25 வது ஆண்டு விழா மாதரை கிராமத்தில் உள்ள தனியார் திருமண மஹாலில் பள்ளியின் தாளாளர் அருள் மாணிக்கம் தலைமையிலும் பள்ளி நிர்வாகி ரோஸ் சுமதி முன்னிலையில் நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளர்களாக உசிலம்பட்டி இன்ஃபான்ட் ஜீசஸ் தேவாலயத்தின் போதகர் மைக்கேல் ராஜ், மதுரை சௌராஷ்ட்ரா கல்லூரியின் உதவி பேராசிரியர் வசந்தகுமார், உசிலம்பட்டி ஆக்சிஸ் வங்கி மேலாளர் பாஸ்கரன் ஆகியோர் கலந்து கொண்டு பள்ளி மாணவ- மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.


இதற்கு முன்னதாக குத்துவிளக்கு ஏற்றி வைத்து நிகழ்ச்சியினை துவக்கி வைத்தனர்., அதனைத் தொடர்ந்து பள்ளி மாணவ – மாணவிகளின் ஆடல் ,பாடல் என பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இதில் பள்ளி தலைமை ஆசிரியர் மலைச்சாமி, ஆசிரியர்கள் , பள்ளி மாணவ- மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.


