• Sun. Dec 7th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

சாம்பவிகா மேல்நிலைப் பள்ளியில் 24வது ஆண்டு விழா

ByG.Suresh

Feb 11, 2024

இந்த ஆண்டு விழாவிற்கு சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தலைமை வகித்தார். திருச்சி மாவட்ட உரிமையியல் நீதிபதிஜெயப்பிரதா முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக முதன்மை கல்வி அலுவலர்பாலமுத்து கலந்து கொண்டார்.
பின்னர் 6 முதல் 12ம் வகுப்பு தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு கேடயங்கள் வழங்கப்பட்டது. 10 மற்றும் 12 வது வகுப்பில் 100% தேர்ச்சி அடைய வைத்த ஆசிரியர்களுக்கும் கேடயங்கள் வழங்கப்பட்டது. பின்னர் தனிநபர் நடனம், குழுநடனம், பாடல் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பள்ளி மாணவ,மாணவிகள், பெற்றோர்கள், சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் சுகிதா , சாம்பவிகா பள்ளியின் தாளாளர் சேகர், சிவகங்கை தமிழ்ச்சங்க தலைவர் கண்ணப்பன், பட்டிமன்ற பேச்சாளர் கண்ணதாசன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.