கன்னியாகுமரி அருகே விஜயநாராயணபுரத்தில் அமைந்துள்ள சாந்திகிரி ஆஸ்ரமத்தின் 21- ஆவது ஆண்டு விழா இன்று (திங்கள்கிழமை) நடைபெற்றது.

இதையொட்டி காலை 5 மணிக்கு பிரார்த்தனை, காலை 6 மணிக்கு ஆராதனை மற்றும் புஷ்ப சமர்ப்பணம், காலை 9 மணிக்கு ஆராதனை, காலை 10 மணிக்கு சத்சங்கம் தொடர்ந்து சாந்திகிர குரு மஹிமா குழுவின் பிரார்த்தனை நடைபெற்றது.
சத்சங்கம் நிகழ்ச்சிக்கு கன்னியாகுமரி நகர்மன்றத் தலைவர் குமரி ஸ்டீபன் தலைமை வகித்தார். சுவாமி சந்திரதீப்தன் வரவேற்றார்.

சாந்திகிரி ஆஸ்ரம பொதுச்செயலர் சுவாமி குருரத்னம் ஞானதபசி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். கன்னியாகுமரி சாந்திகிரி பொறுப்பாளர் ஜனனி தீரா மற்றும் சாந்திகிரி ஆஸ்ரம பொறுப்பாளர்கள் .ஸோமநாதன், கற்பகம், சசீந்திர தேவ்,.ஞானதீப்தன், விஸ்வப்பிரியா ஆகியோர் உரையாற்றினர். கன்னியாகுமரி சாந்திகிரி ஒருங்கிணைப்பாளர் .முத்துராஜலிங்கம் நன்றி கூறினார்.
இதை தொடர்ந்து நண்பகல் 12 மணிக்கு ஆராதனை, பிற்பகல் 1 மணிக்கு அன்னதானம், மாலை 6 மணிக்கு ஆராதனை, தீப பிரதஷிணம், இரவு 9 மணிக்கு ஆராதனை, சமர்ப்பணம் ஆகியவை நடைபெற்றது.

நிகழ்வின் ஆஸ்ரமத்தில் 21_வது ஆண்டின் அடையாளமாக பல்வேறு மரக்கன்றுகள் நடும் நிகழ்வில். முதல் மரக்கன்றை. கன்னியாகுமரி நகராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் மரக்கன்றை நட்டு தொடங்கிவைத்தார்.