• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் ஊழியர்களுக்கான 20வது அகில இந்திய பி.எஸ்.என்.எல் விளையாட்டு போட்டி..

BySeenu

Aug 22, 2024

பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் பணியாற்றிவரும் ஊழியர்களுக்கான 20வது அகில இந்திய பி.எஸ்.என்.எல் விளையாட்டு போட்டிகள் துவக்கவிழா கோவை வ.உ.சி. மைதானத்தில் நடைபெற்றது.

கோவை மாவட்ட பி.எஸ்.என்.எல் முதன்மை பொதுமேலாளர் சங்கர் வரவேற்புரை நிகழ்த்த ஷிவ் பிரதாப் சிங் நிம்ராணா தலைமையுரை ஆற்றினார். தமிழ்நாடு தொலைத்தொடர்பு வட்ட தலைமைப் பொது மேலாளர் பனாவத்து வெங்கடேஷ்வரலு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு விளையாட்டுப் போட்டிகளை துவக்கி வைத்தார். விழாவில் முன்னாள் சர்வதேச டென்னிஸ் விளையாட்டு வீரர் கே.ஜீ.ரமேஷ் மற்றும் கேரள முன்னாள் கூடைப்பந்து மாநில விளையாட்டு வீரர் ஆர்.முரளி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டு சிறப்பித்தனர். அதன் பின்னர் கைப்பந்து, கூடைப்பந்து மற்றும் டென்னிஸ் போட்டிகள் நடைபெற்றது. கூடைப்பந்து லீக் போட்டிகளில் தமிழ்நாடு அணி இமாச்சலப்பிரதேச அணியை 76-49 என்ற புள்ளிகணக்கிலும்,கேரள அணி மகாராஷ்டிர அணியை 58-18 என்ற புள்ளிகணக்கிலும் மற்றும் மேற்குவங்க அணி சத்தீஸ்கர் அணியை 60-43 என்ற புள்ளிகணக்கிலும் வென்றன.கைப்பந்து லீக் போட்டிகளில் தமிழ்நாடு அணி உத்திரகாண்ட் அணியை 2-0 என்ற செட்கணக்கிலும், கர்நாடக அணி பீகார் அணியை 2-0 என்ற செட்கணக்கிலும், இமாச்சலபிரதேச அணி உத்திரபிரதேச மேற்கு அணியை 2-0 என்ற செட்கணக்கிலும் மற்றும் ராஜஸ்தான் அணி அஸ்ஸாம் அணியை 2-0 என்ற செட்கணக்கிலும் வென்றன.டென்னிஸ் போட்டிகளில் உத்தரகாண்ட் அணி உத்திரபிரதேச மேற்கு அணியையும் மற்றும் பஞ்சாப் அணி உத்திரபிரதேச அணியையும் வென்றன.