• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

மோகன்லால் படத்தின் சாதனையை முறியடித்த 2018

மலையாள திரையுலகில் அதிக வசூல் செய்த படம் என்ற பெருமையை கடந்த ஏழு ஆண்டுகளாக மோகன்லால் நடிப்பில் வெளியான ‘புலிமுருகன்’தக்கவைத்திருந்தது இந்த படத்தின் வசூல் சாதனையை ‘2018’ படம் முறியடித்துள்ளது.

ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்கத்தில் கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியான மலையாள திரைப்படம் ‘2018’. இந்தப் படத்தில் டொவினோ தாமஸ், ஆசிஃப் அலி, குஞ்சாகா போபன், வினீத் ஸ்ரீனிவாசன், அபர்ணா பாலமுரளி, லால், கலையரசன், நரேன் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனரநோபின் பால் இசையமைத்துள்ள இப்படம் கடந்த 2018-ல் கேரளா சந்தித்த பெருவெள்ளத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வரும் ‘2018’ மலையாள சினிமாவில் அதிவேகமாக ரூ.100 கோடி வசூலை குவித்த படம் என்ற பெருமையை பெற்றது. அதே போல மலையாள சினிமாவின் முதல் ரூ.160 கோடி வசூலித்த படம் என்ற பெயரையும் ‘2018’ தக்கவைத்துள்ளது.இந்த நிலையில் இப்படம் கேரளாவில் மட்டுமெ ரூ.85 கோடி வசூலித்துள்ளது. இதற்கு முன் மோகன்லாலின் புலிமுருகன் படம் தான் கேரளாவில் அதிகபட்சமாக ரூ.84 கோடி வசூலித்திருந்தது. தற்போது 7 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த சாதனையை ‘2018’ தகர்த்து ரூ.85 கோடிக்கும் அதிகமான தொகையை வசூலித்துள்ளது.