• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

டிப்பர் லாரி மோதிய விபத்தில் 2 மாணவர்கள் பலி!!

ByB. Sakthivel

Jul 8, 2025

புதுச்சேரி வில்லியனூர் அடுத்த தொண்டமாநத்தம் ஆனந்தம் நகர் பகுதியைச் சேர்ந்தவர் நடன சபாபதி. இவர் இன்று காலை தனது இரு சக்கர வாகனத்தில் அவரது பிள்ளைகள் ஜீவா துர்கேஷ் ஆகியோரே அழைத்துக் கொண்டு முத்திரையர் பாளையம் பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அப்போது ஊசுடேரி சந்திப்பில் வரும்போது நடன சபாபதியின் பின்பக்கமாக வந்த டிப்பர் லாரி ஒன்று அவரது பைக்கின் மீது மோதியது. இதில் நிலைகுலைந்த அவர் வலது புறமாக கீழே விழுந்தவுடன் அவர்கள் மீது டிப்பர் லாரி ஏறியது. இதில் சம்பவ இடத்திலேயே இரண்டு மாணவர்களும் தலை நசுங்கி பலியாகினர். படுகாயம் அடைந்த ‌நடன சபாபதி கதிர்காமம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

விபத்து அறிந்து சம்பவ இடத்தில் திரண்ட பொதுமக்கள் ஆத்திரமடைந்து டிப்பர் லாரியின் கண்ணாடியை உடைத்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த வில்லியனூர் போக்குவரத்து போலீசார் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.