தேனி அருகே வீரபாண்டி முல்லைப் பெரியாற்றில் மூதாட்டி ஒருவர் ஆற்றில் விழுந்து தற்கொலைக்கு முயன்று உள்ளார்.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் ஹட்டிராஜ் மற்றும் பிரபாகரன் துரிதமாக செயல்பட்டு ஆற்றில் அடித்து செல்லப்பட்ட மூதாட்டியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இதனை அடுத்து மருத்துவமனையில் மூதாட்டிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு அவரது உயிரை காப்பாற்றப்பட்டது.
தற்கொலைக்கு முயன்ற மூதாட்டியின் பெயர் இந்திராணி (75) என்றும் போடியில் உள்ள தனது மகளின் வீட்டில் வசித்து வந்துள்ளார்.
வயது மூப்பின் காரணமாக தொடர்ந்து உடல் வலியால் தவித்து வந்த மூதாட்டியை குடும்பத்தினர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல நேரம் இல்லாததால் உடல் வலியை தாங்க முடியாமல் தற்கொலை முயன்றுள்ளதாக கூறப்படுகிறது

தற்போது மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை கொடுக்கப்பட்டு வரும் நிலையில் தற்கொலைக்கு முயன்ற மூதாட்டியை துரிதமாக செயல்பட்டு காப்பாற்றி அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த காவலர்கள் ஹட்டிராஜ் மற்றும் பிரபாகரன் ஆகியோரை தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சினேகா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வரவழைத்து அவர்களை பாராட்டி தனது வாழ்த்துக்களை தெரிவித்து சான்றிதழ்களை வழங்கினார்.