• Sun. Jan 11th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

ரூ.2.94 கோடி தங்கம் கடத்தி வந்த 2 பேர் கைது

ByA.Tamilselvan

Oct 5, 2022

கோவை விமான நிலையம் வழியாக வெளிநாடுகளில் இருந்து அடிக்கடி தங்கம் கடத்தி வரப்படுகிறது. இதனை அதிகாரிகள் கண்காணித்து தங்கத்தை கடத்தி வரும் பயணிகளை மடக்கி பிடித்து வருகின்றனர்.
சிங்கப்பூரில் இருந்து கோவைக்கு விமானத்தில் வந்த 6 பயணிகளை பிடித்து அவர்களது உடமைகளை தீவிர சோதனை செய்தனர்.
ரூ.2.94 கோடி மதிப்பிலான 5.6 கிலோ தங்க நகைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் அதிகாரிகள் தங்கம் கடத்தி வந்த 2 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் சென்னையை சேர்ந்த முகமது அப்சல் (வயது 32) மற்றும் திருச்சியை சேர்ந்த கிருஷ்ணன் (66) என்பது தெரியவந்தது. இதில் முகமது அப்சல் ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான தங்கத்தை கடத்தி வந்ததால் கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். ரூ.50 லட்சம் மதிப்பிலான தங்கத்தை கடத்தி வந்த கிருஷ்ணனை கைது செய்து ஜாமீனில் விடுவித்தனர் .