கரூர், மண்மங்கலத்தை சேர்ந்த வழக்கறிஞர் தனசேகரன் இவருக்கு கரூரை சேர்ந்த வலிமையான மக்கள் கட்சி நிறுவனத்தலைவர் சத்தியமூர்த்தி, உழைக்கும் மக்கள் விடுதலைக் கழக நிறுவனத் தலைவர் தேக்கமலை ஆகியோர்,

திண்டுக்கல்லை சேர்ந்த கமலா என்பவருக்கு சொந்தமான வேடசந்தூர், புதுக்கோட்டையில் உள்ள 5 ஏக்கர் நிலத்தை வாங்கி தருவதாக தனசேகரிடம் பல்வேறு தவணைகளில் ரூ.61,40,000 பெற்றுக் கொண்டு சத்தியமூர்த்தி, தேக்கமலை மற்றும் கரூரை சேர்ந்த சுரேஷ்குமார், ஹேமலதா, வானவில்பாஸ்கர் ஆகியோர் உதவியுடன் போலி கிரைய ஒப்பந்த ஆவணங்களை தயாரித்து கொடுத்து மோசடி செய்தது தொடர்பாக மாவட்ட எஸ்பி.பிரதீப் அவர்களிடம் தனசேகரன் புகார் அளித்தார்.
இதனைத் தொடர்ந்து மாவட்ட குற்றப்பிரிவு DSP.குமரேசன் தலைமையிலான போலீசார் சத்தியமூர்த்தி, ஹேமலதா, தேக்கமலை, வானவில்பாஸ்கர், சுரேஷ்குமார் ஆகிய 5 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு சத்தியமூர்த்தி மற்றும் ஹேமலதா ஆகிய 2 பேரை கைது செய்து திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.











; ?>)
; ?>)
; ?>)