கோவை மாநகர் மாவட்டம் பீளமேடு பகுதி கழகம் சார்பாக, மறைந்த கேப்டன் விஜயகாந்த் முதலாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு நடைபெற்றது.
கடந்த ஆண்டு டிசம்பர்-28 ஆம் தேதியன்று புரட்சிகலைஞரும்,தேசிய முற்போக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனருமான கேப்டன் விஜயகாந்த் மறைந்தார். அவர் மறைந்து ஓராண்டு காலம் நிறைவு பெற்றது முன்னிட்டு முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி நிகழ்ச்சிகள் தமிழகம் தோறும் நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக தேசிய முற்போக்கு திராவிட கழகம் கோவை மாநகர் மாவட்டம் பீளமேடு பகுதி கழகத்தின் ஆனணகினங்க. 28வது வட்ட கழகம் ஆவராம்பாளையம் பகுதியில் கேப்டன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி மற்றும் பொதுமக்களுக்கு அன்னதான வழங்கும் நிகழ்ச்சியில் வட்ட செயலாளர் L.சங்கர் கணேஷ் தலைமையில் நடைபெற்றது .
இந்நிகழ்ச்சியில் V.கணேசன், P.சிவகுமார், கார்பம்ஸ், முருகேசன், ஆட்டோ சண்முகம், ஆட்டோ. பிரகாஷ், கிருஷ்ணன் குணா, மதுரை முருகேசன்,பாண்டியன், செந்தில்குமார், ரஜினி, அறந்தை சுந்தர், திலிப், இளங்கோநகர் கண்ணன், ஆறுமுகம் மற்றும் கழக தொண்டர்கள். பொதுமக்கள் என ஏராளமானனோர் கலந்து கொண்டு விஜயகாந்த் உருவ படத்திற்கு அஞ்சலி செலுத்தினர்.
