புதுக்கோட்டை மாநகராட்சி மாலையிடூ அருகே உள்ள பாசில் நகரில் வசிப்பவர் முருகேசன், ராணி தம்பதியினர் முருகேசன் விவசாய பணி மேற்கொண்டும் பைனான்ஸ் நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ஆடி18 நேற்று குடும்பத்தினர் புதுக்கோட்டை மாவட்டம் ராங்கியம் அருகே உள்ள தனது வயலுக்கு சென்று விட்டு, கோவிலுக்கு சென்றும் கடவுள் வழிபாட்டில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் இன்று காலை முருகேசன் ராணி தம்பதியினர் தனது வீட்டிற்கு திரும்பி உள்ளனர். அப்பொழுது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் வீட்டுக்குள் சென்று பார்க்கும் பொழுது வீட்டில் இருந்த அனைத்து பீரோல்களும் உடைக்கப்பட்ட நிலையில் வீட்டில் வைக்கப்பட்டிருந்த 2 லட்சம் ரூபாய் ரொக்கம் 160 பவுன் தங்கம் வைர மோதிரம் வைரத்தோடு ஆகியவற்றை மறுமணம் அவர்கள் திருடி சென்றதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
தம்பதியினர் திருக்கோகர்ணம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த டிஎஸ்பி அப்துல் ரகுமான் மற்றும் திருக்கோகர்ணம் காவல் நிலைய ஆய்வாளர் விஜயகுமார் முதற்கட்ட விசாரணையை துவக்கினர். மேலும் சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகை பதிவுகளை பதிவு செய்தனர். இந்த திருட்டு சம்பவத்தால் அப்பகுதி யில் பெரும் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் வீட்டின் உரிமையாளரான ராணி கண்ணீர் மல்க தனது பொருள்கள் மாயமாகிவிட்டதாக அழுது புலம்பியது

அனைவருக்கும் சோகத்தை ஏற்படுத்தியது மேலும் காவல்துறையினர் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இச்சம்பவத்தில் முருகேசன் ராணியின்மகன் மற்றும் மருமகள் பெங்களூரில் இருந்து வருகை தருவதாகவும் அவர்களுடைய அறையில் எவ்வளவு பொருட்கள் திருட்டு போனது என்பது இனிமேல் தெரிய வரும்
என அவர்கள் தெரிவித்தனர்.





