மேற்கு வங்காளத்தின் ‘ ‘பங்காலி’ பகுதியில் இருந்து கொச்சி நோக்கிய. தொழில் துறை பாதுகாப்பு படையின்(CISF) சைக்கிள் பயணம் இந்தியாவின் 9_ மாநிலங்கள் வழியாக. வந்தே மாதரம் பாடலின் 150_வது ஆண்டு விழாவின் சிறப்புடன். துறைமுகங்களின் பாதுகாப்பு, இயற்கை பேரிடர் காலங்களில் மக்கள் எத்தகைய பாதுகாப்பு தன்மையை மேற்கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வை நாட்டுமக்கள் மத்தியில் ஏற்படுத்தும் பிரச்சாரம், துண்டுபிரசுரம் வினியோகம் என்ற பயணிகளுடன்.

நாட்டின் இரண்டு பகுதிகளான.மேற்கு வங்கத்தின் ‘பக்காலி’ பகுதியில் இருந்தும், குஜராத்தின் ‘லக்பட் பகுதியில் இருந்தும் தொடங்கிய விழிப்புணர்வு சைக்கிள் யாத்திரையை. ஜனவரி திங்கள் 28_ம் நாள் டெல்லியில் உள்ள மேஜர் தியானிசன்த் தேசிய மைதானத்தில் ‘காணொலி’ மூலம் துவக்கிவைத்தார். மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்தியானந்தா தொடங்கி வைத்தார்.

மேற்கு வங்காளத்தின் பகுதியில் இருந்து மொத்தம்
100 வீரர்கள்,வீரங்கனைகளின் சைக்கிள் பயணம் பெப்ரவரி திங்கள் 19_ம் நாள் கன்னியாகுமரி முக்கடல் சங்கம பகுதிக்கு வந்து சேர்ந்தனர். 9 மாநிலங்கள் வழியாக 6500 கிலோமீட்டர் தூரமான இந்தியாவின் தென் எல்லை கன்னியாகுமரியை வந்தடைந்தனர். வந்தே மாதரம் பாடலின் 150 _ வது ஆண்டை சிறப்பிக்கும் வகையில்.

இந்தியாவின் தென் எல்லையான கன்னியாகுமரியில் சைக்கிள்கள் பயண குழுவினர்களை. மத்திய தொழில் துறை பாதுகாப்பு படையின் கமாண்டர்
மங்கா சவுத்ரி, குமரி மாவட்ட கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் இளங்கோ, அகஸ்தீஸ்வரம் விவேகானந்த கலைக் கல்லூரியின் முதல்வர் மகேஷ் ஆகியோர் வரவேற்றனர்.

அகஸ்தீஸ்வரம் விவேகானந்த கல்லூரி கலையரங்கில் சைக்கிள் பயண வீராங்கனைகள், வீரர்கள் பாராட்டப்பட்டார்கள். தேசப்பற்றை ஏற்படுத்தும் பல்வேறு நடனம் மற்றும் கலை நிகழ்வுகளுடன் இந்த நிகழ்வுகள் நிறைவடைந்தது.
கொச்சியில் எதிர் வரும் 22_ம் தேதி இந்த சைக்கிள் பயணம் நிறைவடைய இருக்கும் நிலையில். அகஸ்தீஸ்வரம் பகுதியில் இருந்து கொச்சி நோக்கிய சைக்கிள் பயணம் இன்று அதிகாலை(பெப்ரவரி_20) தொடங்கியது.






