• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சிறப்பு தரிசனம் மூலம் சுமார் 15 கோடி வருமானம்

ByKalamegam Viswanathan

May 11, 2023

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சிறப்பு தரிசனம் மூலம் சுமார் 15 கோடியே 11,71, 200 வருமானம் – ஆர்டிஐ தகவல்.!!
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் நிலையில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சிறப்பு தரிசனம் மூலம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவதை பல்வேறு முறைகேடுகள் உள்ளதாகவும் இதனால் கோவிலுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதாக தொடர்ந்து புகார் இருந்து வந்த நிலையில் மதுரை சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகத்திடம் கேட்கப்பட்ட கேள்விக்கு மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகம் அளித்த பதிலில் சுமார் 15 கோடியே 11 லட்சத்து 71 ஆயிரத்தி இருநூறு ரூபாய் கடந்த 2020 முதல் 2022 வரை வருமானமாக கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளது..