• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

மறைந்த தேவேந்திரன் நாடார் 14 ஆம் ஆண்டு நினைவு தினம்… கோவையில் பல்வேறு நலத்திட்ட உதவிகள்..,

BySeenu

Jun 20, 2024

மறைந்த தேவேந்திரன் நாடார் 14 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு கோவையில் ஆர். கே. தேவேந்திரன் நாடார் அறக்கட்டளை சார்பாக பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

தெய்வேந்திரன் நாடார் அவர்களின் 14 -ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, ஆர்.கே.தேவேந்திரன் நாடார் அறக்கட்டளை சார்பாக தெய்வேந்திரன் நாடாரின் சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம், மார்த்தாண்ட பட்டியில் உள்ள தெய்வேந்திரன் நாடார் நினைவு மண்டபத்தில் ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, சீருடை, இலவச தையல் எந்திரம், மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள், மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில்கலைச்செல்வி தெய்வேந்திரன்,ரத்தினமாலா ராஜேஷ்,அகிலேஷ் குமார்,ஆதித்யா ராஜேஷ் குமார் மற்றும் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.

இதன் தொடர்ச்சியாக, கோவை ரத்தினபுரி அலுவலகத்தில் அமைந்துள்ள அவரது உருவப்படத்திற்கு பொதுமக்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.தொடர்ந்து, நடைபெற்ற நலத்த்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வில் ஓய்வு பெற்ற காவல் துறை கண்காணிப்பாளர் ஆர்.ரத்தின சபாபதி தலைமை தாங்கி விழாவில் பல்வேறு மாணவ மாணவியர்களுக்கு அறக்கட்டளையின் சார்பாக கல்வி மற்றும் மருத்துவ உதவி தொகைகளை வழங்கினார்.. மேலும் அனேக முதியோர் இல்லங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளுக்கு மதிய அசைவ உணவு வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் கருணாகரன். தொழில் அதிபர்கள் கே ஆர் ராஜா. கே.கருணாமூர்த்தி, தெய்வேந்திரன் நற்பணி மன்ற நிர்வாகிகள் தனசேகரன், அய்யம்பெருமாள், செல்வகுமார், கோபாலகிருஷ்ணன், சூசை ராஜ்குமார், ராதாகிருஷ்ணன், மணி, விஜயகுமார், தர்மராஜ்,அலுவலக ஊழியர்கள் ஜெபமாலைராஜ், இசக்கி காந்தி, பிரவீன் குமார், மகேஷ்குமார், பிரிட்டோ, பூர்ணிமா,ராதா பிரியதர்ஷினி மற்றும் பொதுமக்கள் பலர் பங்கேற்றனர்.நிகழ்வுக்கான ஏற்பாடுகளை டிரஸ்ட் அறங்காவலர்கள் கலைச்செல்வி தெய்வேந்திரன்,ரத்தினமாலா ராஜேஷ்,அகிலேஷ் குமார், ஆதித்யா ராஜேஷ் குமார் ஆகியோர் செய்திருந்தனர்.