மதுரை மாவட்டம் விராட்டிபத்து பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், மஞ்சா வர்மக்கலை அகடாமியின் 13வது ஆண்டு மாநில அளவிலான வர்மக்கலை குத்து வரிசை போட்டி தலைமை ஆசான் மற்றும் நிறுவனர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது.
இந்த போட்டியில் தமிழகம் முழுவதிலும் இருந்து 200க்கும் மேற்பட்ட வீரர்கள் – வீராங்கனைகள் பங்கேற்றனர். இந்தக் வர்மக்கலை குத்து வரிசை என்பது கராத்தே, குங்ஃபூ , குத்து சண்டை போன்ற தற்காப்பு கலைகளுக்கெல்லாம் மூத்த மற்றும் தமிழர்களின் ஆதிகால தற்காப்பு மற்றும் போர் தந்திர கலையாக கருதப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த கலைகளில் ஒன்றான மெய்திண்டா கலை மூலம் உலகத்தில் எந்த மூலையில் இருப்பவரையும் மயக்கம் அடைய செய்து தங்களை தற்காத்துக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போட்டியில் வெற்றிப் பெற்ற முதல் மூன்று வெற்றியாளர்களுக்கு கோப்பைகள், பதக்கங்களை மஞ்சப்பை திரைப்பட இயக்குனர் ராகவன் வழங்கினார். இந்நிகழ்வில் தொழில்நுட்ப இயக்குனர் மாதவன் மற்றும் அகடாமியின் மூத்த நிர்வாகிகள், உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.