திருவனந்தபுரத்தில் இருந்து அய்லன்ட் இரயிலில் பயணித்த 13_வயது அசாம் சிறுமி. கன்னியாகுமரியில் பரபரப்பை ஏற்படுத்திய கேரள தொலைகாட்சி நிறுவனங்கள்.
கன்னியாகுமரி இரயில் நிலையத்திற்கு நேற்று முன்தினம்(ஆகஸ்ட் 19) மாலை வந்த அய்லன்ட் தொடர் வண்டியில் வந்த பயணிகள் இரயில் நிலையத்தில் இறங்கி சென்றவர்கள் கூட்டத்தில் அசாமை சேர்ந்த 13_வயது சிறுமி தஸ்மித் தம்சாமும் இருந்தாளா? கேரள மாநிலத்தில் பற்றிய பரப்பு ,குமரியிலும் பரவ செய்த கேரளாவில் உள்ள தொலைக்காட்சி நிர்வாகத்தின் செய்தியாளர்கள் கூட்டம்.

அசாம் மாநிலத்தை சேர்ந்த ஒரு விவசாய குடும்பத்தினர். கேரள மாநிலத்தின் தலைநகர் திருவனந்தபுரத்தில் இருந்து 15_கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கழக்கூட்டம் பகுதியில் உள்ள புனித ஜோசப் பள்ளியில் தோட்டத் தொழிலாளர்களாக கடந்த மூன்று மாதமாக சிறுமியின் பெற்றோர்கள் வேலை செய்யும் நிலையில்,இவர்களது 13_வயது மகள் தஸ்மித்தம்சமும் கல்வி கற்று வரும் நிலையில், தோட்டத்தொழிலாளர்களான பெற்றோர்கள் நேற்று முன்தினம் (ஆகஸ்ட்_19)ம் நாள் மாலை கழக்கூட்டம் பகுதியில் தங்கள் 13 வயது மகளை காணவில்லை என புகார் கொடுத்துள்ளனர்.

திருவனந்தபுரம் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த, பெங்களூரா_கன்னியாகுமரி அய்லன்ட் தொடர் வண்டியில் அசாம் மாணவி ஒரு இரயில் நிற்பது போன்ற நிழல் படம் சமூக வலைதளத்தில் பரவ, இதனை ஆதாரமாக கொண்டு கேரளா காவல்துறையும், கேரளாவில் உள்ள அனைத்து ஊடக நிறுவனங்களும் இன்று(21அகஸ்ட்) அதிகாலை முழுவதும் கன்னியாகுமரி இரயில் நிலையம், கடற்கரை பகுதிகளில்.

கேரள காவலர்களுடன் கன்னியாகுமரி காவலர்களும் அசாம் சிறுமியை வலை வீசி தேடி வருவதுடன், கன்னியாகுமரி இரயில் நிலையத்திலுள்ள ரயில்வே பாதுகாப்பு படை அலுவலகத்தில் உள்ள சி சி டி வி கேமராவை சோதனை இட்டு வரும் நிலையில், சிறுமி அய்லன்ட் இரயிலில் கன்னியாகுமரி வந்ததாக எந்த தடையமும் இல்லாத நிலையில், கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திரம் சந்திப்பில் உள்ள ஆட்டோ டிரைவர் ஒருவர் சம்பந்தப்பட்ட சிறுமியை பார்த்ததாக சொன்னதின் அடிப்படையில். அசாம் சிறுமி தொடர் வண்டியில் பயணித்த ஒரு நிழல் படத்தை மட்டுமே ஆதாரமாக கொண்டு அசாம் சிறுமி தேடப்படும் நிலையில், பாரசாலையில் தொடர்வண்டி சிறிது நேரம் நின்று புறப்பட்ட நிலையில் வழியில் அசாம் சிறுமி இறங்கி இருக்கலாம் என்ற நிலையில் அசாம் சிறுமியின் தேடுதல் தொடர்கிறது.