• Thu. Jan 8th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

பாதுகாப்பு படைகளில் 1,22,555 காலி பணியிடங்கள் 

Byமதி

Dec 7, 2021

நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த பாதுகாப்பு துறை இணை அமைச்சர் அஜய் பாட் கூறியதாவது… 

“இந்திய ராணுவத்தில் 7476 அதிகாரிகள் மற்றும் 97177 வீரர்கள் பணியடங்களும், இந்திய விமானப்படையில் 621 அதிகாரிகள் மற்றும் 4850 வீரர்கள் பணியிடங்களும், இந்திய கடற்படையில் 1265 அதிகாரிகள் மற்றும் 11166 வீரர்கள் பணியடங்களும் காலியாக உள்ளன.

பாதுகாப்பு துறையில் பணியாளர்கள் பற்றாக்குறையை நீக்க  அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இளைஞர்கள் பாதுகாப்பு படைகளில் சேருவதை அதிகரிக்க  பள்ளி, கல்லூரிகள் மற்றும் என்சிசி முகாம்களில் ஊக்குவிப்பு  உரைகள் தொடர்ச்சியாக நிகழ்த்தப்படுகின்றன” என தெரிவித்துள்ளார்.