திருப்பரங்குன்றம் மலை மீது கடந்த 21ஆம் தேதி சந்தனக்கூடு திருவிழாவிற்காக சிக்கந்தர் பாஷா தர்கா சார்பாக கோவிலுக்கு சொந்தமான கல்லத்தி மரத்தில் வளர்பிறைக் கொடி ஏற்றப்பட்டது.

திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றுவது தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கின் போது நீதிபதி கோவிலுக்கு சொந்தமான இடத்தில் தர்கா நிர்வாகம் கொடியேற்றி தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? என கேள்வி எழுப்பினார்.
இதனைத் தொடர்ந்து கோவில் நிர்வாகம் சார்பாக தர்காவை சேர்ந்த அடையாளம் தெரியாத நபர்கள் சட்ட விரோதமாக கொடியேற்றியதாக திருப்பரங்குன்றம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இவரைத் தொடர்ந்து நேற்று மதியம் திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள கல்லத்தி மரம் இருக்கும் பகுதிக்கு செல்வதற்கு கூறி பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச். ராஜா உள்ளிட்ட பாஜகவினர் சென்றனர் அதற்கு காவல்துறையினர் அங்கு செல்ல அனுமதி இல்லை எனக் கூறி தடுத்து நிறுத்தினர்.
இதனைத் தொடர்ந்து மூன்று மணி நேரத்திற்கு மேலாக திருப்பரங்குன்றம் மலையின் 1000 அடிக்கு மேல் காவல்துறைக்கும் பாஜகவினுடைய வாக்குவாதம் ஏற்பட்டு தர்ணாவில் ஈடுபட்டனர்.

இதனால் திருப்பரங்குன்றம் மலை மீது எந்த ஒரு அனுமதியின்றி பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் ஒன்று கூடி கல்லத்தி மரத்தில் உள்ள கொடியை அகற்ற வேண்டும் என காவல்துறையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக,
பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச் ராஜா மதுரை மேற்கு மாவட்ட தலைவர் சிவலிங்கம் உள்ளிட்ட 12 பேரை திருப்பரங்குன்றம் போலீஸார் நேற்று கைது செய்த நிலையில் போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்தல் பொது அமைதிக்கு பங்கம் தெரிவித்தல் உள்ளிட்ட மூன்று பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது.




