தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள மண்டலகோட்டை ஊராட்சி 32.வடக்கிக்கோட்டை கிராமத்தில் நேற்று மாலை காற்றுடன் பலத்த மழை பெய்தது அப்போது வடக்கி கோட்டை கீழத்தெருவிற்கு செல்லும் மின் கம்பி விழுந்ததில் 11 ஆடுகள் இறந்து விட்டன.

இதில் வடக்கிகோட்டையை சேர்ந்த நடராஜன் என்பவருக்கு சொந்தமான 4 ஆடுகளும் அதே தெருவை சேர்ந்த குமார் என்பவருக்கு சொந்தமான ஏழு ஆடுகளும் மின்சார கம்பி அறுந்து விழுந்ததில் சம்பவ இடத்திலேயே மின்சாரம் பட்டு பரிதாபமாக உயிரிழந்தது. இது தொடர்பாக தகவல் அறிந்த வருவாய்த் துறையினர் மற்றும் ஒரத்தநாடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.