மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா அரியதாப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சித்தர் ராமதேவர் ஆன்மீக பீடம் சார்பில் 1008 கலச வேள்வி பூஜைகள் நடைபெற்றது.

சித்தர் ஸ்ரீ ராமதேவர் ஜெயந்தியை முன்னிட்டு 1008 கலச கேள்வி பூஜைக்கு ஏராளமான கலந்து கொண்டனர்.யாகசாலை பூஜைக்கு பின் 1008 கலசத்தில் இருந்து புனித நீர்கள் ராம தேவர் சிலைக்கு பூஜைகள் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து பால் தயிர் திருமஞ்சனம் உள்ளிட்ட 18 வகை பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது அதனை தொடர்ந்து தீப தூப நிகழ்ச்சியில் ஸ்ரீ சித்தர் ராமதேவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். மேலும் விழாவில் கலந்து கொண்ட 200க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ ராமதேவர் சித்தர் பீடம் அறக்கட்டளை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது.