• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

திண்டுக்கல்லில் ஆசிரியர் வீட்டில் 100 பவுன் தங்க நகை கொள்ளை

ByNS.Deva Darshan

Oct 3, 2024

திண்டுக்கல், பழனிசாலை, K.T.மருத்துவமனை எதிர்புறம் நைனார் முகமது தெரு பகுதியை சேர்ந்த சவரிமுத்து, இவர் ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் தனது மகளின் திருமணத்திற்காக துணி எடுப்பதற்காக நேற்று காலை திருச்சிக்கு சென்று விட்டு இரவு சுமார் 11 மணியளவில் வீட்டிற்கு வந்தபோது வீட்டின் கதவின் பூட்டை மர்ம நபர்கள் உடைத்து கம்பியால் நெளித்து உள்ளே புகுந்து பீரோவை உடைத்து பீரோவில் இருந்த 100 பவுன் தங்க நகை மற்றும் ரூ.20,000 பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தாலுகா காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். மேலும், சம்பவ இடத்திற்கு நேரில் வந்து திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் விசாரணையை துரிதப்படுத்தினார்