• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

கோவை தனிஷ்க் நகை கடையில் 100% தங்க பரிமாற்றம் புதிய திட்டம் அறிமுகம்

BySeenu

May 31, 2024

கோவை மேட்டுப்பாளையம் வெள்ளக்கிணறு பகுதியில் இயங்கிவரும் தனிஷ்க் நகை கடையில், அந்நிறுவன மண்டல வணிக மேலாளர் சந்திரசேகர், வட்டார வணிக மேலாளர் வினீத், அசோகன் முத்துசாமி பிரான்சைஸ் நிர்வாக இயக்குனர் ஆகியோர் 100% தங்க பரிமாற்றம் புதிய திட்டத்தை அறிமுகம் செய்து வைத்தனர்.

புதிய திட்டம் குறித்து அவர்கள் கூறுகையில்..,

தனிஷ்க் நகை கடை தற்போது வாடிக்கையாளர்களுக்கான 100 சதவீதம் தங்க பரிமாற்றம் என்ற ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளோம். அதன்படி வாடிக்கையாளர்களின் பழைய தங்கத்திற்கு அதிகப்பட்ச மதிப்பை வழங்கிட திட்டமிட்டு கடந்த ஒருவார காலமாக இந்த திட்டத்தை செயல்படுத்தி வருகின்றனர்.

கோல்டு எக்சேஞ்ச் பாலிசி என்ற திட்டத்தின் மூலம் வாடிக்ககையாளர்கள் தங்களுடைய பழைய நகைகளுக்கு கழிவே இல்லாமல் அதற்கு பதிலாக புதிய வடிவமைப்புகளை கொண்டு புதிய தங்க ஆபரணங்களாக தரம் உயர்த்தி கொள்ளும் ஒரு அரிய வாய்ப்பை பயன்படுத் திகொள்ளலாம். இந்த திட்டத்தின் மூலம் வாடிக்கையாளர்கள் தங்கள் தங்கத்திற்கான அதிகபட்ச மதிப்பை பெறுவதை உறுதிப்படுத்துகிறது.

இந்தியாவில் உள்ள எந்த நகைக்கடையிலிருந்தும் வாங்கிய 20 கேரட் மற்றும் அதற்கு மேற்பட்ட பழைய தங்க நகைகளாக இருந்தாலும் அவற்றை தனிஷ்க்கில் அளித்து புதிய ஆபரணங்களாக மாற்றிக் கொள்ளலாம். இந்த தங்கபரிமாற்றம் திட்டத்தின் கீழ் தனிஷ்க்கின் சிறப்பான தங்க நகைகளான க்ளாஸ் குந்தன், குந்தன் போல்கி, ஓபன் போல்கி, பிஜேடபிள்யூஎஸ், வண்ணகற்கள் மற்றும் இன்னும் பல பிரிவுகளிலான நகைகளையும் தனிஷ்க் தங்க பரிமாற்றம் திட்டம் மூலம் வாங்க முடியும் என்று தெரிவித்துள்ளனர். இந்த திட்டம் வரும் ஜூன் 15ம் தேதி வரை செயல்பாட்டில் இருக்கும் என்று கூறினார்கள்.