• Wed. Feb 4th, 2026
WhatsAppImage2026-01-31at0134274
previous arrow
next arrow
Read Now

இலங்கை கடற்படை அட்டூழியம்: தமிழக மீனவர்கள் 10 பேர் கைது!

ByP.Kavitha Kumar

Mar 20, 2025

நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த 10 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளதுடன் அவர்களின் இரண்டு படகுகளையும் பறிமுதல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிப்பதாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் சம்பவம் தொடர்கதையாக உள்ளது. அத்துடன் தமிழகம் மற்றும் புதுச்சேரி மீனவர்களின் விசைப் படகுகளைப் பறிமுதல் செய்து அரசுடைமையாக்குவது போன்ற நடவடிக்கைகளையும் இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தி கொள்ளையடிக்கும் சம்பவங்களும் அடிக்கடி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், கைது நடவடிக்கைகளைக் கண்டித்து தமிழகத்தில் மீனவர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவித்திட வலியுறுத்தி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தொடர்ந்து கடிதம் எழுதி வருகிறார். இதற்கிடையே கைது செய்யப்படும் தமிழக மீனவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதும், தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதும், தாக்குதல் நடத்துவதும் தொடர்கிறது.

இந்த நிலையில் நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த 10 தமிழக மீனவர்கள் எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக் கூறி அவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன் தமிழக மீனவர்களின் 2 படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்துள்ளது என்றும் கூறப்படுகிறது.