பிரைட் என்டர்டெயின் மென்ட் டைம்ஸ் சார்பில் நரசிம்மன் பக்கிரிசாமி தயாரித்து அவரே இயக்கி படத்தின் நாயகனாகவும் நடித்து வெளிவந்த திரைப்படம்
“ஹெச்.எம்.எம்”
இத் திரைப்படத்தில் சுமிரா, சிவா, ஷர்மிளா, அனுராக் ஆகியோர்கள் நடித்துள்ளனர்.
ஒரு நள்ளிரவில் அடர்ந்த காட்டுப் பகுதியில் தனியாக வசிக்கும் நாயகி சுமிராவை,முக மூடி அணிந்த ஒரு நபர் கொலை செய்ய முயற்சிக்கின்றார்,
முக மூடி நபரிடம் தப்பிக்க போராடிக் கொண்டிருக்கும் நிலையில் சுமிராவின் தோழி அந்த வீட்டிற்கு வர அவள் கொலை செய்யப்படுகின்றாள்இந்தக் கொலை அரங்கேறிய அதே நள்ளிரவில் சுமிதாவின் தோழனும் அந்த வீட்டிற்கு வர அவரும் கொலை செய்யப்படுகின்றார்.

அடுத்தடுத்து அரங்கேறிய அந்த கொடூர கொலைகளுக்கான பின்னணி என்ன?அந்த முகமூடி அணிந்த நபர் யார்? என்பதை படத்தின் மீதி கதை.
படத்திற்கு கதை எழுதி இயக்கி தானே தயாரித்து நாயகனாகவும் நடித்துள்ளார் நரசிம்மன் பக்கிரி சாமி கதைக்கேற்ற உத்வேகத்துடன் நடித்துள்ளார்.
நாயகி சுமிரா, நடித்திருக்கிறார். முகமூடி கொலையாளியிடம் இருந்து தப்பிக்க போராடி இறுதியில் அவரை எதிர்த்து நிற்கும் காட்சியில் அசத்தியுள்ளார்.
நாயகியின் தோழி மற்றும் அவரது காதலர் ஆகியோர்கள் தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளனர்.
கிரனின் ஒளிப்பதிவுமற்றும் புரூஸ் பின்னணி இசை, துரைராஜ் படத்தொகுப்பு ஆகியவை படத்திற்கு ஏற்றவாறும் படத்தின் பட்ஜெட் ஏற்றவாறும் பயணித்துள்ளது.

மொத்தத்தில் ’ஹெச்.எம்.எம்’ திரில்லர்.