• Fri. Dec 12th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

மர்ம முறையில் இரத்த காயங்களுடன் பெண் சாவு ! தொடரும் கொலைகள்…

By

Aug 26, 2021

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள வானக்கண்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் துர்கா தேவி. இவருக்கும் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள மாளியக்காடு கிராமத்தைச் சேர்ந்த ராஜேஷ் என்பவருக்கும் கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது .

இவர் இரண்டு ஆண் குழந்தைகளுடன். கணவன் வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று இரவு 10 மணி அளவில் மாளியக்காட்டில் உள்ள அவரது வீட்டின் பின்புறம் ரத்த காயங்களுடன் மர்ம முறையில் துர்க்காதேவி இறந்து கிடந்தார். இதையடுத்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்று வைத்துள்ளனர்.

இந்நிலையில் துர்கா தேவி அவரது கணவர் ராஜேஷ் மற்றும் அவர்களது குடும்பத்தார்களால் அடித்துக் கொல்லப்பட்டதாகவும் அவர்களை கைது செய்ய வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட பெண்ணின் உறவினர்கள் மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டு. உடலை பெறப்போவதில்லை என்று தொடர்ந்து ஆவேச குரல் எழுப்பினர்

. இதையடுத்து பட்டுக்கோட்டை இன்ஸ்பெக்டர் ராஜேஷ் சம்பவ இடத்திற்கு வந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் சாலை மறியல் இருந்து விலகினர்.இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.