• Sun. Dec 14th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

பாசி ஏலம் ஒத்தி வைப்பு..!

By

Aug 13, 2021

தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் மொத்தம் 37 கண்மாய்கள் மற்றும் இரண்டு அணைகள் உள்ளது. இதில் உள்ள 37 கண்மாய்களிலும் நீரை நிறைத்து விவசாயிகளுக்கு தேவையான நேரத்தில் நிரை திறந்து கண்மாய்களின் நீரை பாதுக்காக தனியாக பெரியகுளம் பொதுப்பணித்துறையில் உதவி பொறியாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் கண்மாய்களில் நீர் தேக்கி வைக்கும் காலங்களில் மீன் வளர்பதற்காக பொதுப்பணித்துறை சார்பாக ஆண்டிற்கு ஒருமுறை டெண்டர் விடப்படு வந்த நிலையில் கடந்த 4 ஆண்டுகளாக பெரியகுளம் பகுதியில் உள்ள பெரியகுளம் கண்மாயில் மீன் வளர்த்து மீன் பிடிக்க முறையாக டெண்டர் விடாமல் தனிப்பட்ட முறையில் விடப்பட்டு மீன் பிடிக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக மீன் வளர்பாளர்கள் மீன் பிடிப்பதற்காக கண்மாயில் தேக்கி வைத்த நீரை வீனாக வெளியேற்றி வந்தனர். இந்நிலையில் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து கடந்த மாதம் கண்மாயில் உள்ள மதகுகளை விவசாயிகள் பூட்டு போட்டு பூட்டினர். இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பாக பெரியகுளம் கண்மாய் மற்றும் சோத்துபாறை அணையில் மீன் பிடிக்க நேற்று ஏலம் விடப்படும் என அறிவிப்பானையை பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் முருகேசன் வெளியிட்ட நிலையில் ,இன்று பெரியகுளம் கண்மாயில் உள்ள மீன் பிடிக்க ஏலம் எடுக்க 100க்கும் மேற்பட்ட நபர்கள் 40 ஆயிரம் ரூபாய் வைப்பு தொகையுடன் வந்த நிலையில் ,ஏலம் கேட்ட அதிக நபர்கள் கூடினர்.

மேலும் கண்மாயின் ஏலம் 20 முதல் 25 லட்சம் ரூபாய் வரை ஏலம் போகும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் உதவி பொறியாளர் முருகேசன் நிர்வாக காரணங்களால் ஏலம் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைப்பதாக ,அலுவலம் முன்பு அறிவிப்பாணையை ஒட்டி ஏலத்தை நிறுத்தி வைத்தார். இதனிடையே கண்மாயை ஏலம் எடுக்க வந்தவர்கள் தொடர்ந்து 4 ஆண்டுகளாக கண்மாயை ஏலம் விடாமல் தனிப்பட்ட நபர்கள் ஆதாயம் அடைய உதவி பொறியாளர் செயல்படுவதாகவும், இதனால் பொதுப்பணித்துறைக்கு தொடர்ந்து வருவாய் இழப்பை ஏற்படுத்தி வருவதாக ஏலம் எடுக்க வந்தவர்கள் குற்றச்சாட்டு கூறி பொதுப்பணித்துறை அலுவலம் முன்பு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து காவல்துறையினர் ஏலம் ஒத்திவைக்கப்பட்டதால் ஏலம் கேட்க வந்தவர்களை அங்கிருந்து கலைந்து செல்ல அறிவுறுத்தியதை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.