• Fri. Oct 3rd, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

தெனாலி ராமனின் வீடு குறித்து சிறப்பு செய்தி வருமாறு…

Byadmin

Jul 20, 2021

கிருஷ்ணதேவராயரின் அரண்மனை அருகே பராமரிப்பின்றி குட்டிச்சுவராக உள்ள தெனாலி ராமனின் வீடு குறித்து சிறப்பு செய்தி வருமாறு.

விஜயநகர பேரரசின் புகழ்பெற்ற விகடகவியாக போற்றப்படுபவர் தெனாலிராமன். மன்னர் கிருஷ்ணதேவராயரின் அரசவையில் அஷ்டதிக்கஜங்கள் எனப்படுகிற 9 அமைச்சர்களில் முக்கியமானவர அன்புக்குரியவர்  தெனாலி ராமன். இந்த சிதிலமடைந்த குட்டிச்சுவர் தான் அவருடைய வீடு. சமர்த்திய சமயோஜித புத்திசாலியான தெனாலிராமனை தனது அருகிலேயே வைத்துக்கொள்ள விரும்பிய கிருஷ்ணதேவராயர் அரண்மனையின் வளாகத்திலேயே பின்புறம் வீடு கட்டிக்கொடுத்து தங்க வைத்தார் என கூறப்படுகிறது.

இந்த வீட்டின் முன்னால் நிற்பது எனது மகன் சேரல்பொழிலன். அவனுக்கு 2 வயது இருக்கும் போது 2009;ம் ஆண்டு திருப்பதிக்கு சென்றுவிட்டு திரும்பும் வழியில் அங்கிருந்து 13 கி.மீ தொலைவில் உள்ள சந்திரகிரி கோட்டையை பார்க்கச் சென்ற போது தெனாலி ராமனின் வீட்டை பார்க்க நேர்ந்தது. சந்திரகிரி கோட்டைக்குள் ராஜா மகாலுக்கு பின்னால் வடக்கு நோக்கி இடிந்த நிலையில் இந்த வீடு உள்ளது. சந்திரகிரி கோட்டைக்குப் போகும் சுற்றுலாப் பயணிகளில் 99 சதவீதம் பேருக்கு இந்த வீட்டுக்கு செல்வதில்லை. இது பற்றி தெரிவதும் இல்லை. இப்பகுதியில் வசிக்கும் மக்களின் செவி வழிச்செய்தியாக இது தான் தெனாலி ராமனின் வீடு என்று அறியப்படுகிறது. ஆனால் ஒன்றிய அரசின் தொல்லியல் துறை உறுதியான ஆதாரம் இல்லாமல் இதை தெனாலியின் வீடாக அறிவிக்கவில்லை. மக்களாலும்ää வரலாற்றாலும் போற்றப்படுகிற தெனாலியின் வீட்டை அடையாளம் கண்டு அதை புதுப்பிப்பதன் மூலம் தெனாலியை கௌரப்படுத்த ஒன்றிய அரசு முயற்சி மேற்கொள்ளலாம்.

  • தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி கொடுத்த தகவல்

பேட்டி. இல.முருகேசன்.