• Sun. Jan 11th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

இந்தியன்-2 பட விவகாரம் மேல்முறையீடு செய்தது லைகா நிறுவனம்!…

Byகுமார்

Aug 7, 2021

இந்தியன்-2’ படத்தை முடித்து கொடுக்காமல் வேறு படங்களை இயக்க இயக்குநர் ஷங்கருக்கு தடை விதிக்கக் கோரி, லைகா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, லைகா நிறுவனத்தின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். தற்போது தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து லைகா சார்பில் மேல் முறையீடு செய்துள்ளது.

இந்த மேல்முறையீட்டு மனு சென்னை உயர்நீதி மன்ற தலைமை நீதிபதியான சஞ்சீவ் பானர்ஜி மற்றும் ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, லைகா தரப்பில், “தனி நீதிபதியின் உத்தரவு நகல் இல்லாமல் எங்களது இந்த மேல் முறையீட்டு வழக்கை விசாரணைக்கு பட்டியலிட வேண்டும்” என்று கேட்கப்பட்டது.

இதை ஏற்றுக் கொண்ட தலைமை நீதிபதி அமர்வு, லைகா நிறுவனத்தின் மேல் முறையீட்டு வழக்கை, விசாரணைக்கு பட்டியலிட உயர் நீதிமன்றத்தின் பதிவுத் துறைக்கு உத்தரவிட்டது.

ஆக, இந்தப் பிரச்சினைக்கு இப்போதைக்கு எண்ட் கார்டு இல்லை..!!!