• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

ஆப்கானில் ராணுவம் விமானத்தாக்குதலில் 200 தலிபான்கள் பலி!….

ByIlaMurugesan

Aug 9, 2021

ஆப்கானிஸ்தான் பாகிஸ்தானுக்கு அருகில் உள்ள நாடாகும். மதத்தின் பெயரால் ஆட்சி நடத்தத் துடிக்கும் தலிபான்கள் அமெரிக்க மீது தாக்குதல் நடத்திய பின்லேடனை குருவாக ஏற்றுக்கொண்டவர்கள். ஆப்கானை முழுக்க முழுக்க தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வர தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார்க்ள.

இந்நிலையில் அமெரிக்காவில் புதிதாக பதவியேற்ற அதிபர் ஜோபைடன் ஆப்கானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறும் என்ற அறிவிப்பை வெளியிட்டதையடுத்து அமெரிக்கப்படைகளும் நேட்டோ படைகளும் கொஞ்சம் கொஞ்சமாக வெளியேறி வருகிறார்கள். இதனால் ஆப்கனை கைப்பற்ற தலிபான்கள் தீவிரமாக போரிடுகிறார்கள்.

இந்நிலையில் ஆப்கன் ராணுவத்தினர் தலிபான்களுடன் இறுதிக்கட்ட போருக்கு தயாராகி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக சீபெர்கான் பகுதியில் ராணுவம் நடத்திய விமானத்தாக்குதலில் 200 தலிபான்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதனையடுத்து தலிபான்களின் நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் மற்றும் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டது.